விஜய் ரசிகர்கள் பழிவாங்க ஆரம்பிச்சிட்டாங்க.. டிரெண்டாகும் வேட்டையன் டிசாஸ்டர் ஹாஷ்டேக்.. என்னாகுமோ?

சென்னை: சூப்பர் ஸ்டார் நடித்த வேட்டையன் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகின்றன. விஜய் படமான கோட் படத்துக்கு கடைசி வரை பிவிஆர் தியேட்டர்களில் காலை 9 மணிக்கு சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதி கிடைக்கவில்லை என்கிற குற்றச்சாட்டுகள் கிளம்பின.

ஆனால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்திற்கு அனைத்து திரையரங்குகளிலும் காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு வரிசையாக வரும் ஞாயிற்றுக்கிழமை வரை காலை 9 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

vettaiyan rajinikanth vijay

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தை ரஜினிகாந்த் ரசிகர்கள் தோல்விப் படமாக மாற்ற சோஷியல் மீடியாவில் ஏகப்பட்ட ட்வீட்களை போட்டும் ஸ்பேஸ் வைத்தும் வன்மத்தை கொட்டி வந்த நிலையில், விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுக்கப் போகிறோம் என #VettaiyanDisaster ஹாஷ்டேக்கை தற்போது டிரெண்ட் செய்து வருகின்றனர்.

வேட்டையன் டிக்கெட் புக்கிங் நிலவரம்: புக் மை ஷோ உள்ளிட்ட டிக்கெட் புக்கிங் தளங்களில் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்துக்கான முதல் நாளைக்கான டிக்கெட்டுகளே பல திரையரங்குகளில் இன்னமும் கிடைப்பதாக விஜய் ரசிகர்கள் ஸ்க்ரீன் ஷாட்களை ஷேர் செய்து கலாய்த்து வருகின்றனர். மேலும், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கான டிக்கெட் புக்கிங் தொடங்கப்பட்டு படமே நாளை வெளியாகவுள்ள நிலையில், இன்னமும் டிக்கெட் புக்கிங் ஹவுஸ்ஃபுல் ஆகவில்லை என்று விஜய் ரசிகர்கள் ஆதாரங்களை அடுக்கி வருகின்றனர்.

இந்தியன் 2வை விட குறைவு?: கோட் திரைப்படம் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் புக் மை ஷோவில் புக் ஆன நிலையில், இந்தியன் 2 திரைப்படம் 6.2 லட்சம் டிக்கெட்டுகள் முன் பதிவு செய்யப்பட்டன. ஆனால், வேட்டையன் திரைப்படம் புரமோஷன் எல்லாம் போட்டும் இன்னமும் வெறும் 4.5 லட்சம் டிக்கெட்டுகள் தான் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

vettaiyan rajinikanth vijay

வேட்டையன் vs வேட்டைக்காரன்: விஜய்யின் லியோ மற்றும் கோட் படங்களை ரஜினிகாந்த் ரசிகர்கள் பழி வாங்கிய நிலையில், வேட்டையன் படத்தை சும்மா விடமாட்டோம் என்றும் நாங்கள் எல்லாம் வேட்டைக்காரன் படை என்றும் விஜய் ரசிகர்கள் வன்மத்தை வண்டி வண்டியாக கொட்டி வருகின்றனர். பெங்களூருவில் ஈ ஓட்டலாம் போலயே என ஸ்க்ரீன் ஷாட்களை போட்டு பொளந்துக் கட்டி வருகின்றனர்.

vettaiyan rajinikanth vijay

நீல சட்டை மாறன் அடி: "நாளைக்கு நம்ம அடிக்குறதால ஒரு அடியே கெடையாது நீல சட்டை மாறன் அடிப்பான் பாரு ஒரு அடி" என ப்ளூ சட்டை மாறனையும் துணைக்கு அழைத்துக் கொண்டனர். தொடர்ந்து ரஜினிகாந்த் மற்றும் வேட்டையன் படத்துக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் அவர் அந்த படத்துக்கு எப்படி விமர்சனம் கொடுக்கப் போகிறார் என்பதை காண ரசிகர்கள் வெயிட்டிங்.

vettaiyan rajinikanth vijay

வேட்டையன் டிக்கெட் இலவசம்: பல்வேறு ஊர்களில் ரஜினிகாந்தின் வேட்டையன் பட டிக்கெட்டுகளை கடைகளில் பொருட்கள் வாங்குபவர்களுக்கு இலவசமாக கொடுப்பதாகவும் ஸ்க்ரீன் ஷாட்களை ஷேர் செய்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள். வேட்டையன் திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதையும் அறிந்துக் கொள்ள பலரும் ஆர்வத்துடன் உள்ளனர். அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி என மல்டி ஸ்டாரர்கள் நடித்தும் மற்ற மாநிலங்களில் வேட்டையன் படத்துக்கு ஹைப்பே இல்லை எனக் கூறுகின்றனர்.

vettaiyan rajinikanth vijay

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X