லிங்கா விவகாரத்தில் விஜய்யை ஏன் இழுக்கிறீர்கள்? - விநியோகஸ்தர்களுக்கு விஜய் ரசிகர்கள் கண்டனம்

By Shankar

லிங்கா படத்துக்கு நஷ்ட ஈடு கொடுக்க விடாமல் ரஜினியை இரு முன்னணி நடிகர்கள் தடுப்பதாக அதன் விநியோகஸ்தர்கள் சிலர் பிரஸ் மீட் வைத்து நிருபர்களிடம் சில தினங்களுக்கு முன்பு கூறினர் அல்லவா..

அந்த நடிகர்கள் யார் யார் என்று மீடியாக்காரர்கள் திரும்ப கேட்டதற்கு அதை இப்போது சொல்ல முடியாது என்று கூறினர் விநியோகஸ்தர்கள்.

Vijay fans turn furious on Lingaa distributors

ஆனால் ஆப் த ரெக்கார்டாக, அந்த நடிகர்கள் விஜய் மற்றும் சரத் குமார்தான் என்று கூறியதாக தகவல் பரவியது. சில மீடியாக்களில் செய்திகளும் வெளியானது.

இந்த தகவல் கேள்விப்பட்டதும் விஜய்யின் ரசிகர்கள் கொதித்தெழுந்துள்ளனர்.

யார் வம்புக்கும் போகாமல், தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் விஜய்யை இந்த விநியோகஸ்தர்கள் எதற்காக வம்புக்கு இழுக்கிறார்கள் என்று கோபமாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

'லிங்கா விவகாரத்தில் விஜய்க்கு துளியும் சம்பந்தமில்லை. இந்த நிலையில் அவர் ரஜினியிடம் போய், லிங்காவுக்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டாம் என்று கூறியதாக விநியோகஸ்தர்கள் சிலர் கூறியிருப்பது விஷமத்தனமானது.

போகிற போக்கில் அத்தனை பேர் பெயரையும் இழுத்து விட்டு வேடிக்கைப் பார்க்கிறார்கள் இவர்கள்.

இதுபோன்ற விஷமப் பிரச்சாரத்தை லிங்கா விநியோகஸ்தர்கள் நிறுத்த வேண்டும்," என்று தெரிவித்துள்ளனர் விஜய் ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X