இது தான் உங்க டக்கா, விஜய்க்கு ஐஸ் வைக்கிறீங்களா?: ஆர்த்தியை கேட்கும் தளபதி ரசிகர்கள்
சென்னை: என்ன விஜய்க்கு ஐஸ் வைத்து பட வாய்ப்பு தேடப் பார்க்கிறீர்களா என்று தளபதி ரசிகர்கள் நடிகை ஆர்த்தியிடம் கேட்டுள்ளனர்.
நடிகை ஆர்த்தி தளபதி விஜய்யை தாக்கிப் பேசியதால் அவரின் ரசிகர்கள் கோபமாக உள்ளனர். இந்நிலையில் ஆர்த்தி மருத்துவமனை ஒன்றில் நடந்த அலட்சியத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
மெர்சல் படத்தில் வந்தது போல் என்று கூறி அந்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.
மெர்சல்
மெர்சலில் சொல்லியது போல் இந்திராகாந்தி பொது மருத்துவமனையில் டயாலிசிஸ்போது மின்சாரம் தடைபட்டதால் மூன்று
நோயாளிகள் உயிரிழப்பு😢 இதற்கு பதில்? என நடிகை ஆர்த்தி ட்வீட்டியுள்ளார்.
தாக்குதல்
ஆர்த்தி உங்களுக்கு என்னாகிவிட்டது. நீங்கள் முதலில் விஜய்யை தாக்கிப் பேசினீர்கள் தற்போது மெர்சலை புகழ்கிறீர்கள். இது எங்களுக்கு பழைய நியூஸ் என்று ஒருவர் கமெண்ட் போட்டார்.
புதுசு
பழசோ, புது நியூஸோ ஆனால் இது உண்மை...என் அம்மாவுக்கு டயாலிசிஸ் செய்ததால் அதன் வலி அறிவேன்..கடவுளை அடுத்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளை நம்புகிறோம். கடவுள் காக்கட்டும் என்று பதில் அளித்துள்ளார் ஆர்த்தி.
பயம்
பார்த்து ட்வீட் போடுங்க ரெய்டு வந்துற போறாங்க ஒன்று ஒருவர் கூறியதற்கு மடில கனம் இல்லை வழியில பயம் இல்லை என்கிறார் ஆர்த்தி.
முடியாது
நீங்க எப்படியோ தளபதி பேன்ஸ் கிட்ட நல்ல பேரு வாங்க பாக்கறீங்க..என்ன பன்றது கடைசி வரைக்கும் அது முடியாது 😂😂
வாய்ப்பு
என்ன வண்டி இந்த பக்கமா சாயுது
ஒருவேள வாய்ப்பு கேட்டு புது டெக்னிக் யூஸ் பன்றிங்களோ


Click it and Unblock the Notifications











