பாதி இங்கே இருக்கு.. மீதி எங்கே.. ஜிமிக்கி பொண்ணு வீடியோ பாடல் ரிலீஸ்.. விஜய் ரசிகர்கள் விரக்தி!
சென்னை: நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 11ம் தேதி வாரிசு திரைப்படம் வெளியானது. அந்த படத்தில் தமன் இசையமைத்து அனிருத் பாடிய ஜிமிக்கி பொண்ணு பாடல் வீடியோவை தயாரிப்பு நிறுவனம் தற்போது வெளியிட்ட நிலையில், ஹாப்பியாக வேண்டிய விஜய் ரசிகர்கள் டென்ஷனாகி உள்ளனர்.
தில் ராஜு தயாரிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் வெளியான வாரிசு திரைப்படம் இதுவரை 275 கோடி வசூல் ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமன் இசையில் உருவான இந்த படத்தில் ஜிமிக்கி பொண்ணு, ரஞ்சிதமே பாடல்கள் மீது தான் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ள நிலையில், ஜிமிக்கி பொண்ணு பாடல் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

ஜிமிக்கி பொண்ணு சாங் ரிலீஸ்
தமன் இசையில் அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி இணைந்து பாடிய ஜிமிக்கி பொண்ணு பாடல் வீடியோ தற்போது வெளியான நிலையில், #JimikkiPonnu ஹாஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். அந்த பாடலில் நடிகர் விஜய்யின் சார்மிங் மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் கவர்ச்சி என ரசிகர்களை வீடியோ பாடல் வெகுவாக கவர்ந்துள்ளது.
செம ஸ்டெப்ஸ்
ஷோபி மாஸ்டர் கொரியோகிராஃபியில் உருவான ஜிமிக்கி பொண்ணு பாடலில் நடிகர் விஜய் நடனமாடும் ஸ்டெப்ஸ் எல்லாமே செம சூப்பராக இருக்கு என விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். வீடியோ பாடல் வெளியான நிலையில், பாக்கெட்டிற்குள் கையை வைத்துக் கொண்டு செம அசால்ட்டாக விஜய் நடனமாடும் காட்சிகளை சின்ன சின்ன க்ளிப்ஸாக வெட்டி ரசிகர்கள் வெளியிட்டு வருகின்றனர்.

வசூல் மன்னன்
கோலிவுட்டின் வசூல் மன்னன் நான் தான் என கெத்தாக சிம்மாசனத்தில் கால் மீது கால் போட்டு அமர்ந்து கொண்டு ஜிமிக்கி பொண்ணு பாடலின் ஆரம்ப காட்சியில் விஜய் வரும் ஷாட்டை அதிகம் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். ராஷ்மிகா மந்தனாவை கூட ரசிக்காமல் விஜய்யை தான் பார்த்துட்டு இருக்கோம் அவ்ளோ க்யூட் என விஜய் ரசிகர்கள் ட்விட்டரை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

என்ன பாதி தான் இருக்கு
ஆனால், முழு பாடலையும் கொண்டாட முடியாமல் பாதி பாடலை மட்டுமே தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு இருப்பதை அறிந்த விஜய் ரசிகர்கள் என்ன பாதி தான் இருக்கு.. மீதியை முழுங்கிட்டீயா என்றும் முழு பாடலை ரிலீஸ் பண்ணு என கொந்தளித்து வருகின்றனர். கண் அசராமல் விஜய்யின் நடனத்தை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு திடீரென 2 நிமிஷத்தில் பாடல் கட் ஆனால் கடுப்பாகத்தானே செய்யும்.
துணிவு மேக்கிங் வீடியோ vs ஜிமிக்கி பொண்ணு
அஜித்தின் துணிவு படத்தின் மேக்கிங் வீடியோவை தயாரிப்பாளர் போனி கபூர் நேற்று வெளியிட்டு இருந்த நிலையில், அதற்கு போட்டியாக இன்று வாரிசு படத்தின் ஜிமிக்கி பொண்ணு பாடல் வெளியாகி உள்ளதா என அஜித் ரசிகர்கள் கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர். அவசர அவசரமாக வெளியிட்ட நிலையில் தான் பாதி பாடலை காணவில்லையா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











