'கோட்’ சாட்டிலைட் உரிமத்தை கைப்பற்றிய பெரிய நிறுவனம்.. இதுதான் அப்டேட்டா என விஜய் ரசிகர்கள் அப்செட்!

சென்னை: நடிகர் விஜய்யின் 50-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்தை தயாரித்து வரும் ஏஜிஎஸ் நிறுவனம் ஏகப்பட்ட அப்டேட்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரே ஒரு சாதாரண அப்டேட்டை மட்டும் தற்போது அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்டுள்ளார். அவரது ட்வீட்டை ஆவலுடன் ஓடி வந்து பார்த்த ரசிகர்கள் அப்செட்டாகி உள்ளனர்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள 'கோட்' திரைப்படம் இந்த ஆண்டு செப்டம்பர் ஐந்தாம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பல படங்களின் ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க் கொண்டிருக்கும் நிலையில், ஏகப்பட்ட சிஜி வேலைகள் அடங்கிய கோட் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் நிலை உருவாகும் எனக் கூறுகின்றனர்.

Vijay GOAT Archana Kalpathi Vijay Birthday Zee Tamil

ஆனால், நடிகர் விஜய் தனது அரசியல் மாநாட்டை 'கோட்' படத்தின் ரிலீஸுக்கு பிறகு நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், படக்குழுவினரை வேகமாக முடிக்கச் சொல்லி உத்தரவு போட்டு உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. லியோ படத்திற்கும் ரிலீஸ் தேதியை முன்னரே அறிவித்ததுதான் படத்தின் இரண்டாம் பாதி சொதப்பிய காரணம் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்: நடிகர் விஜய்யின் 50வது பிறந்த நாள் ஜூன் 22-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்னமும் விஜய் ரசிகர்களுக்கான வெயிட்டான எந்த ஒரு அப்டேட்டும் கிடைக்காமல் இருப்பது ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த மாதம் முழுவதும் ஏகப்பட்ட சர்ப்ரைஸ்கள் காத்திருக்கின்றன என ரசிகர்களை எதிர்பார்க்க வைத்து விட்டு அர்ச்சனா கல்பாத்தி கடைசியில் ஏமாற்றிவிட்டார் என விஜய் ரசிகர்கள் பலரும் வருத்தத்தில் உள்ளனர்.

சாட்டிலைட் உரிமம்: ஜீ தமிழ் நிறுவனம் தளபதி விஜய் நடித்துள்ள 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்தின் சாட்டிலைட் உரிமத்தை பெற்றுள்ளதாக அர்ச்சனா கல்பாத்தி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஏற்கனவே 93 கோடி ரூபாய்க்கு கோட் படத்தின் சாட்டிலைட் உரிமம் விற்பனை ஆனதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த விஷயத்தையே பெரிய அப்டேட்டாக கொடுத்துள்ள நிலையில், ரசிகர்கள் பெரிய அளவில் திருப்தி அடையவில்லை.

இதுதான் அப்டேட்டா?: நடிகர் விஜய்யின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு கோட் படத்தின் க்ளிம்ப்ஸ் காட்சி அல்லது செகண்ட் சிங்கிள் ஏதாவது வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு வெறும் சாட்டிலைட் உரிமம் குறித்த அறிவிப்பு மட்டுமே வெளியாகி இருப்பது ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது. அர்ச்சனா அக்கா இதுதான் அப்டேட்டா? வேற ஏதாவது வெயிட்டா பார்த்து செய்யுங்க என விஜய ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சிக்கு விரைந்த விஜய்: கள்ளச்சாராயம் குடித்து கள்ளக்குறிச்சியில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தவெக தலைவர் நடிகர் விஜய் கள்ளக்குறிச்சிக்கு விரைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிறந்தநாள் கொண்டாட்டத்தையும் நடிகர் விஜய் தவிர்த்து விடுவாரா? என்றும் கேள்விகள் எழுந்துள்ளன. நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெள்ளிக்கிழமையான நாளை துப்பாக்கி, போக்கிரி என ஒட்டுமொத்தமாக 6 விஜய் படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X