அல்வா கொடுத்த அர்ச்சனா கல்பாத்தி.. கோட் பட ரிலீஸ் தாமதமாகுமா?.. கடுப்பான தளபதி ஃபேன்ஸ்!

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள கோட் படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகும் என்றும் அதன் ரிலீஸ் அப்டேட் நேற்று வெளியாகும் என காத்திருந்த ரசிகர்களுக்கு கடைசி நேரத்தில் அர்ச்சனா கல்பாத்தி அல்வா கொடுத்து விட்டார்.

விஜய், பிரசாந்த், மோகன், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு, பிரேம்ஜி, ஜெயராம் என நட்சத்திர பட்டாளமே கோட் படத்தில் நடித்துள்ள நிலையில், அதன் போஸ்டரை மட்டும் வெளியிட்டுள்ளனர்.

GOAT Vijay Archana Kalpathi

யுவன் சங்கர் ராஜா இசையில் ஏற்கனவே வெளியான 3 பாடல்களும் ரசிகர்களை கவராத நிலையில், டிரெய்லர் வெளியீட்டிலும் சொதப்பி வரும் நிலையில், படம் திட்டமிட்டபடி செப்டம்பர் 5ம் தேதி வெளியாகுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

அலறிய அர்ச்சனா: சில நாட்களுக்கு முன்னதாக ஒரு பெரிய படம் விஷுவல் எஃபெக்ட்ஸ் காரணமாக ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்படும் என நெட்டிசன் ஒருவர் போட்ட ட்வீட்டுக்கு சம்பந்தமே இல்லாமல் அலறி அடித்துக் கொண்டு அர்ச்சனா அக்கா ஆஜராகி அப்படியெல்லாம் ஆகாது என்றும் சொன்ன தேதியில் படம் வெளியாகும் என்றும் சொல்லியிருந்தார். அதன் பின்னர், கோட் படத்தை பற்றியே பேசலையே என்றும் மழுப்பி விட்டார்.

டிரெய்லர் வெளியீட்டில் சொதப்பல்: கோட் படத்தின் டீசர் இதுவரை வெளியாகவில்லை. டபுள் ஆக்‌ஷன் விஜய் இருக்கும் ஷாட்ஸ் மட்டுமே வெளியானது. அதன் பின்னர், படத்தின் டிரெய்லர் ரிலீஸ் குறித்த அப்டேட் நேற்று மாலை அறிவிக்கப்படும் என கூறிய அர்ச்சனா கல்பாத்தி, கடைசி நேரத்தில் இன்னமும் சிறப்பான டிரெய்லரை கொடுக்க உழைத்துக் கொண்டிருக்கிறோம் எனக் கூறி அதன் ரிலீஸ் அப்டேட்டை நேற்று அறிவிக்கவில்லை.

சொதப்பல் டிரெய்லர்: கடைசி நேரத்தில் அவசர கதியில் ஏற்பாடு செய்யப்பட்ட கோட் படத்தின் டிரெய்லரை பார்த்த விஜய்க்கு அதை வெளியிட சம்மதம் இல்லை என்றும் டிரெய்லரை மறுபடியும் க்ரிப்பா எடிட் செய்து கொண்டு வாங்க, அதன் பின்னர் ரிலீஸ் தேதி அறிவிக்கலாம், ஒன்றும் அவசரமில்லை என உத்தரவிட்டதால் தான் டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை என சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

ரிலீஸ் தேதியில் சிக்கல்?: டிரெய்லர் ரிலீஸ் முன்ன பின்ன இருந்தாலும் பரவாயில்லை. ஆனால், ரிலீஸ் தேதியில் எந்தவொரு மாற்றமும் வராமல் செப்டம்பர் 5ம் தேதி வெளியிட்டு விடுங்கள் என அர்ச்சனா கல்பாத்திக்கும் வெங்கட் பிரபுவுக்கும் விஜய் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதிகளவில் சிஜியுடன் உருவாகியுள்ள கோட் படம் எப்படி இருக்கும் என்பது டிரெய்லர் வெளியானால் தெரிந்து விடும் என ரசிகர்கள் நம்பிக் கொண்டிருக்கும் நிலையில், டிரெய்லரை முடிந்தவரை சிறப்பாக கொடுக்க படக்குழு முயற்சித்து வருகிறதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X