ரசிகர்களை கவர்ந்த வாரிசு படம்.. தளபதி 67 படத்தின் அப்டேட்டிற்காக காத்திருக்கும் விஜய் ரசிகர்கள்!

சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் இரு தினங்களுக்கு முன்பு வெளியாகியுள்ளது வாரிசு படம்.

குடும்ப சென்டிமெண்டை மையமாக கொண்டு வெளியாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களை சர்வதேச அளவில் கவர்ந்துள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது தளபதி 67 படத்தில் நடிக்கத் துவங்கியுள்ளார் நடிகர் விஜய்.

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஜெயசுதா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 11ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ள படம் வாரிசு. விஜய் நீண்ட நாட்களுக்கு பிறகு பேமிலி சென்டிமெண்டை மையமாக வைத்து இந்தப் படத்தில் நடித்துள்ளார்.

துணிவு படத்துடன் மோதிய வாரிசு

துணிவு படத்துடன் மோதிய வாரிசு

அஜித்தின் துணிவு படத்துடன் வாரிசு படம் மோதிய நிலையில் எந்தப் படத்திற்கு ரசிகர்களின் வரவேற்பு அதிகமாக காணப்படும் என்று ரசிகர்கள் அதிகமாக யோசித்த நிலையில், சர்வதேச அளவில் வாரிசு படம் ரசிர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. வசூல்மழையும் பொழிந்து வருகிறது.

தளபதி 67 டெஸ்ட் சூட்

தளபதி 67 டெஸ்ட் சூட்

ஏராளமான நடிகர்களை கொண்டு வாரிசு படத்தை சிறப்பாக எடுத்து முடித்துள்ளார் வம்சி படிப்பள்ளி. படத்தின் பாடல்களை இசையமைப்பாளர் தமன் சிறப்பாக கொடுத்துள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீசுக்கு முன்னதாகவே தனது அடுத்தப் படத்தின் டெஸ்ட் சூட்டில் பங்கேற்றுள்ளார் நடிகர் விஜய். இந்தப் படத்தில் மனோபாலா உள்ளிட்டவர்களும் பங்கேற்றனர்.

2 ஆண்டுகளை கடந்த மாஸ்டர் படம்

2 ஆண்டுகளை கடந்த மாஸ்டர் படம்

முன்னதாக தளபதி 67 படத்தின் அப்டேட்டை தொடர்ந்து கொடுத்து வந்தார் லோகேஷ் கனகராஜ். முன்னதாக விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் படத்தை அவர் கொடுத்திருந்தார். இன்றைய தினம் மாஸ்டர் படம் வெளியாகி இரண்டு வருடங்களை கடந்துள்ளது. இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

விரைவில் தளபதி 67 அப்டேட்

விரைவில் தளபதி 67 அப்டேட்

இந்நிலையில் தளபதி படத்தில் விஜய் வயதான கேங்ஸ்டராக நடிக்கவுள்ளதாகவும், படத்தில் அவருக்கு 6 வில்லன்கள் என்றும், படத்தில் த்ரிஷா விஜய்க்கு ஜோடி சேரவுள்ளதாகவும் பல உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகின. இதனிடையே, படத்தின் அறிவிப்பு வெளியான பின்பே படத்தின் அப்டேட்டை வெளியிடவுள்ளதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார்.

 விஜய் ரசிகர்கள் வெயிட்டிங்

விஜய் ரசிகர்கள் வெயிட்டிங்

இந்நிலையில் தளபதி 67 படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை அவர் வெளியிட உள்ளதாக தற்போது தெரிவித்துள்ளார். இன்னும் 10 தினங்களில் படத்தின் அப்டேட்டை தெரிவிக்க உள்ளதாக அவர் தனது சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். படத்தின் அப்டேட்களுக்காக விஜய் ரசிகர்கள் மரண மாசாக வெயிட் செய்து வரும்நிலையில், அவரது இந்த அறிவிப்பு அவர்களுக்கு உற்சாகம் கொடுத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X