தொடர்ந்து ட்ரெண்டாகிவரும் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்... ரசிகர்கள் காத்திருப்பு
சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் பீஸ்ட். இந்தப் படம் வரும் ஏப்ரலில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் சூட்டிங் முழுமையாக நிறைவடைந்துள்ளது.
நீண்ட நாட்களாக படத்தின் பாடலுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் விரைவில் வெளியிட அவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

பீஸ்ட் படம்
நடிகர் விஜய் மாஸ்டர் படத்திற்கு பிறகு தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் வரும் ஏப்ரல் மாதத்தில் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் டப்பிங் உள்ளிட்ட பணிகளை படக்குழு முடித்துள்ளது. இந்நிலையில் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அனிருத் இசை
படத்தில் விஜய்க்கு ஜோடியாகியுள்ளார் பூஜா ஹெக்டே. இசையமைத்துள்ளார் அனிருத் மற்றும் டாக்டர் வெற்றிக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது. கடந்த ஆண்டிலேயே படத்தின் சூட்டிங் மற்றும் டப்பிங் பணிகளை விஜய் முடித்து கொடுத்துவிட்டார்.

போஸ்டர் வெளியீடு
படத்தின் 100 நாட்கள் சூட்டிங் நிறைவையொட்டி நெல்சன் படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் டிரம்ஸ் வாசிக்கும் விஜய்யை பார்க்க முடிந்தது. பூஜா ஹெக்டே பாட்டு பாடியிருந்தார். இந்த போஸ்டர் ரசிகர்களிடையே மிகுந்த வைரலானது.

பாடலுக்கு காத்திருக்கும் ரசிகர்கள்
படத்தின் ரிலீஸ் குறித்து அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தில் முதல் பாடல் வெளியீட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். விஜய் பாடியுள்ள இந்தப் பாடலுக்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ட்ரெண்டான பாடல் கோரிக்கை
இந்நிலையில் #BeastFirstSingle என்ற ஹேஷ்டேக்கை தொடர்ந்து ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். மேலும் தளபதி66 ஐயும் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இதனால் ட்விட்டர் தளமே விஜய் ரசிகர்களின் ஆதிக்கத்தில் காணப்படுகிறது.

பிரம்மாண்ட செட்
விஜய்யின் பீஸ்ட் படத்தின் சூட்டிங் ஜார்ஜியா, சென்னை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பிரம்மாண்டமான ஷாப்பிங் மால் செட் போடப்பட்டு இந்தப் படத்தின் சூட்டிங்கை படக்குழு நடத்தியது.


Click it and Unblock the Notifications