அமையட்டும் தளபதியின் சர்கார் நல்லாட்சி: விஜய் ரசிகர்கள் அடித்த மாஸ் போஸ்டர்

By Siva

மதுரை: சர்கார் படம் ரிலீஸாக உள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் அடித்த போஸ்டர் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி உள்ளிட்டோர் நடித்துள்ள சர்கார் படம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது.

ரிலீஸுக்கு இன்னும் நாட்கள் இருக்கின்றபோதிலும் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தை துவங்கிவிட்டனர். தல, தளபதி ரசிகர்களில் மதுரைக்கார ரசிகர்களுக்கு எப்பொழுதுமே பாசம் அதிகம்.

Vijay fans want to see him as the CM of Tamil Nadu

இந்நிலையில் விஜய்யை வைத்து மாஸாக ஒரு போஸ்டர் அடித்துள்ளனர் மதுரை ரசிகர்கள். அந்த போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழக மக்களின் மீது அக்கறை இல்லாத ஆளுங் கட்சி, எதற்கும் உதவாத எதிர் கட்சி, அமையட்டும் தளபதியின் சர்கார் நல்லாட்சி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் பிறந்தநாளுக்கு போஸ்டர் அடிக்கும்போது எல்லாம் வருங்கால முதல்வரே என்ற வாசகத்தை மறக்காமல் சேர்க்கிறார்கள் ரசிகர்கள். விஜய்யை அவரின் ரசிகர்கள் முதல்வராக பார்க்கத் துடிப்பதில் தவறு இல்லை என்று ஏ.ஏ.சந்திரசேகர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X