படம் ஃபுல் ஆகி பாத்துருப்ப.. ஃபஸ்லுக்குக்கு தியேட்டர் ஃபுல் ஆகி பாத்துருக்கியா.. இந்தா பாரு! #Master

சென்னை: விஜயின் 64வது படமான மாஸ்டர் படத்தின் தலைப்பை அறிவதற்காக விஜய் ரசிகர்கள் தியேட்டரில் திரண்டு ஹவுஸ்ஃபுல்லாக்கிய காட்சி வைரலாகி வருகிறது.

நடிகர் கார்த்தியை வைத்து கைதி என்ற ஹிட் படத்தை கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், விஜயின் 64வது படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் மாளவிகா மோகனன் விஜய்க்கு ஜோடியாகவும் விஜய் சேதுபதி விஜய்க்கு வில்லனாகவும் நடிக்கின்றனர்.

இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை வெளியானது. நடிகர் விஜய் தனது டிவிட்டர் பக்கத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார்.

ரசிகர்கள் ஆர்வம்

ரசிகர்கள் ஆர்வம்

3டி எஃபெக்டில் உள்ளது மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை காண ரசிகர்கள் ஆர்வமுடன் இருந்தனர்.

ராம் சினிமாஸ்

ராம் சினிமாஸ்

இதனால் பல திரையரங்குகளில் இலவசமாக ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸை காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, ராம் சினிமாஸில் ரிலீஸ் செய்யப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை ஏராளமான ரசிகர்கள் கண்டு களித்தனர்.

டிவிட்டரில் ஷேர்

டிவிட்டரில் ஷேர்

திரையில் ரிலீஸ் செய்யப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அவர்கள் தங்களின் செல்போனிலும் போட்டோ எடுத்தனர். இதனை ராம் சினிமாஸ் நிறுவனம் தங்களின் டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறது.

படம் ஃபுல் ஆகி

படம் ஃபுல் ஆகி

மேலும் படம் ஃபுல் ஆகி பாத்துருப்ப.. ஃபஸ்லுக்குக்கு தியேட்டர் ஃபுல் ஆகி பாத்துருக்கியா.. இந்தா பாரு.. மாஸ்டரின் மாஸ் செலிபிரேஷன் என்று கேப்ஷன் கொடுத்துள்ளனர்.

அள்ளும் லைக்ஸ்

ராம் சினிமாஸின் இந்த போட்டோவை இதுவரை 12ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ரீடிவிட் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X