பிகிலுக்கு சிக்கல் வராமல் இருக்க மண் சோறு சாப்பிடும் விஜய் ரசிகர்கள் - மாரியம்மனுக்கு வேண்டுதல்

சென்னை: விஜய் நடித்த பிகில் திரைப்படத்தின் காப்புரிமை கேட்டு உதவி இயக்குநர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால் இப்படம் வரும் 25ஆம் தேதி வெளியாவதில் சிக்கல் எற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த நாகை மாவட்ட விஜய் ரசிகர்கள் பிகில் திரைப்படம் எந்தவித சிக்கலும் இல்லாமல் வெளியாகி வெற்றியடைய வேண்டும் என்று கோவிலில் மண்சோறு சாப்பிட்டு பிரார்த்தனை செய்தனர்.

இந்த நிகழ்வு தமிழகம் எங்கும் உள்ள ரசிகர்களை உணர்ச்சி வசப்படுத்தியுள்ளது. மேலும் இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பரபரப்பாக வைரலாகி வருகிறது.

 Vijay fans with special prayers for Bigil Movie releases

இளைய தளபதி விஜய்யின் பிகில் திரைப்படத்தை வெறித்தனமாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக பல நிகழ்வுகள் தமிழகம் எங்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், நாகை மாவட்ட ரசிகர்கள் ஒரு நெகிழவைக்கக் கூடிய ஒரு செயலை தங்களது தளபதிக்காக செய்துள்ளனர். அது சார்ந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அட்லீ-விஜய் காம்போவில் உருவாகி தீபாவளிக்கு வெளியாக தயாராக இருக்கும் பிகில் படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு இருப்பது அனைவரும் அறிந்த ஒரு செய்தி. ஆனால் படத்தின் காப்புரிமை கேட்டு துணை இயக்குனர் செல்வா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்துள்ளதால் பிகில் திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வரும் அக்டோபர் 25ஆம் தேதி பிகில் வெளியாகும் என்று ஆவலுடன் காத்திருக்கும் விஜய் ரசிகர்களுக்கு இந்த செய்தியானது அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதனையடுத்து, விஜய் ரசிகர்கள் அவரின் பிகில் திரைப்படம் எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் நல்லபடியாக வெளியாகி வெற்றி பெற வேண்டும் என்று கடவுளிடம் மன்றாடி பிராத்தனை செய்து வருகிறார்கள்.

நாகை மாவட்டத்தில் உள்ள விஜய் ரசிகர் மன்றத்தின் சார்பில் சிறப்பு வழிபாட்டுடன் பூஜை ஒன்று மயிலாடுதுறையில் உள்ள மாரியம்மன் கோயிலில் நடைபெற்றது. இந்த பூஜையின் போது விஜய் ரசிகர்கள் அவரின் பிகில் திரைப்படம் எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் தீபாவளிக்கு வெளியாகவேண்டும்.

அது ஒரு வெற்றிப்படமாக அமைய வேண்டும். மேலும், அவரும் அவரது குடும்பமும் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று மண் சோறு சாப்பிட்டனர், விஜய்யின் ரசிகர்கள். பொதுவாக விஜய் படம் வெளியாவதற்கு தான் கொண்டாட்டங்கள் அதிகமாக இருக்கும்.

ஆனால் இந்த முறை படம் வெற்றியடைய பூஜைகள் நடத்தப்பட்டது இதுவே முதல் முறை. இந்த நிகழ்வு தமிழகம் எங்கும் உள்ள ரசிகர்களை உணர்ச்சி வசப்படுத்தியுள்ளது. மேலும் இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பரபரப்பாக வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X