விஜய் வீட்டு வாசலில் விடிய விடிய தியானம்.. சுற்றி சுற்றி வரும் பிரச்னை.. பதறும் ரசிகர்கள்!

சென்னை: நடிகர் விஜய் மற்றும் அவரது கட்சியினர் வரும் மே 4ஆம் தேதிக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறார்கள். மொத்த தமிழ்நாடும் அதற்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றாலும் இவர்களின் காத்திருப்பு கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஸ்பெஷல். விஜய் என்ற ஒற்றை நபர், அவரது சினிமா பிரபல்யம் என இவற்றை மட்டுமே உருவாக்கப்பட்ட அவரது கட்சியின் கட்டமைப்பால், விஜய்க்கு தமிழ்நாட்டு அரசியலில் எவ்வளவு மவுசு இருக்கிறது என்பது குறித்து பார்க்க ஆவலுடன் இருக்கிறார்கள்.

இப்படி இருக்கையில் நடிகர் விஜய் தனக்கு சாதகமாக தேர்தல் முடிவுகள் வரவேண்டும் என்று முருகர் கோவில், சாய்பாபா கோவில் என தேடித் தேடி வணங்கி வருகிறார். இவருடன் இவரது கட்சியினரும் அவர்களுக்கு அருகில் உள்ள கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளுக்குச் சென்று பிராத்னை செய்து வருகிறார்கள். இப்படி இருக்கையில் நடிகர் விஜய் சாய்பாபா கோவிலுக்கு சென்று வந்த நாளில், மூதாட்டி ஒருவர் விஜய் வீட்டு வாசலில் அமர்ந்து விடிய விடிய தியானம் செய்துள்ளார்.

Vijay Fans Worried as Elderly Woman Meditates Outside His House Overnight Viral Incident Sparks

விஜய் வீட்டு வாசலில் அவர் அமர்ந்திருந்ததை பார்த்த பலரும் விஜய்யை சந்திக்க இந்த பாட்டி இப்படி ஒரு ரூட் போட்டுள்ளாரா என்று யோசிக்கத் தொடங்கி விட்டனர். பார்ப்பதற்கு சாய்பாபா கோவில் பக்தர் மற்றும் வள்ளலாரைப் பின்பற்றுபவர்கள் போல வெள்ளை நிறத்தில் ஆடைகள் அணிந்து கொண்டு இருந்த அந்த மூதாட்டியிடம் சிலர் பேச்சு கொடுத்தால், அந்த மூதாட்டி ரஃப்-அண்ட்- டஃப்ஃபாக பதில் அளித்தார். அவரிடம் இருந்து இப்படியான பதிலை யாருமே எதிர்பார்க்கவில்லை.

Vijay Fans Worried as Elderly Woman Meditates Outside His House Overnight Viral Incident Sparks

அடாவடிப் பேச்சு: தலைசுற்றலாக இருக்கிறது என்று அந்த மூதாட்டி கூறினார். உடனே வாங்க அம்மா போய் சாப்பிட்டுவிட்டு வரலாம் என்று கூறினார், ஒருவர் அதற்கு அந்த மூதாட்டி உடனே, எனக்கு தலை சுற்றினால் உனக்கு என்ன என்று பதில் கேள்வியை தடாலடியாக கேட்க, அங்கிருந்தவர்கள் அனைவரும் ஷாக் ஆகினர். சாப்பிடாத மூதாட்டி, விஜய் வீட்டு வாசலில் மயங்கி விழுந்து ஏதாவது ஆகிவிட்டால், அதற்கும் விஜய் தான் காரணம் என்று சொல்லுவார்களே என அவரது ரசிகர்களும் ஆதரவாளர்களும் புலம்பி வருகிறார்கள்.

தவறான முன் உதாரணம்: மேலும் இப்படி வீட்டின் முன் தர்ணா இருப்பது போல இருந்தால் விஜய்யை சந்தித்து விடலாம் என்ற தவறான முன் உதாரணம் ஆகிவிடும், எனவே விஜய் அந்த மூதாட்டியை சந்திக்காமல் இருப்பது தான் நல்லது என்றும் பலர் பதிவிட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X