விஜயகாந்த் மறைவு.. 80 வயதான விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் ஆடியோவில் அஞ்சலி.. ஏன் தெரியுமா?

சென்னை: சட்டம் ஒரு இருட்டறை படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராக பிரபலமானவர் எஸ்.ஏ. சந்திரசேகர். விஜயகாந்த் நடிப்பில் வெளியான அந்த படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. கிட்டத்தட்ட 57 புதுமுக இயக்குநர்களை உருவாக்கிய விஜயகாந்த் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வரிசையாக பல படங்களில் நடித்தார்.

தனது மகன் விஜய்யையும் விஜயகாந்த் போலவே ஸ்டாராக மாற்ற வேண்டும் என நினைத்து செந்தூரப்பாண்டி படத்தில் விஜய்யை நடிக்க வைத்தார் எஸ்.ஏ. சந்திரசேகர் நெருங்கிய நண்பர்களான இருவரும் கடைசி நேரத்தில் சந்திக்க முடியாமல் இறைவன் சதி செய்து விட்டாரே என எஸ்.ஏ. சந்திரசேகர் தற்போது ஆடியோ மூலமாக விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தி உள்ளார்.

Vijay father and Director SA Chandrasekhar sends audio condolence for Vijayakanth demise

விஜயகாந்தை வைத்து பல படங்கள்: 1981ம் ஆண்டு சட்டம் ஒரு இருட்டறை படத்தில் விஜயகாந்தை ஹீரோவாக வைத்து படம் இயக்கிய எஸ்.ஏ. சந்திரசேகருக்கு அந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறியது. அதே ஆண்டு நீதி பிழைத்தது எனும் இன்னொரு படத்தையும் அவர் விஜயகாந்தை வைத்தே இயக்கினார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட நல்ல நட்பு தொடர்ந்து பல படங்களில் இருவரையும் இணைந்து பணியாற்ற வைத்தது.

இத்தனை படங்களா?: பட்டணத்து ராஜாக்கள், ஓம் சக்தி, சாட்சி, வெற்றி, வீட்டுக்கு ஒரு கண்ணகி, குடும்பம், புது யுகம், எனக்கு நானே நீதிபதி, வசந்த ராகம், சட்டம் ஒரு விளையாட்டு, ராஜநடை, செந்தூரப்பாண்டி, பெரியண்ணா வரை பல படங்களை இயக்கி உள்ளார் எஸ்.ஏ. சந்திரசேகர்.

கட்டித் தழுவ நினைத்தேன்: கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜயகாந்த் உயிரோடு இருக்கும் போதே அவரை சந்தித்து கட்டித் தழுவ நினைத்தேன். ஆனால், அதற்கான அனுமதி கிடைக்கவில்லை. தற்போது உயிரற்று கிடக்கும் அவரது உடலை பார்க்க கூடாது என கடவுள் நினைத்து விட்டாரோ என தெரியவில்லை, நேரில் வரமுடியாத சூழல் என இரங்கல் தெரிவித்துள்ளார் எஸ்.ஏ. சந்திரசேகர்.

துபாய் டூர்: விஜயகாந்தின் மறைவு செய்தி அறிந்து ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் ஷூட்டிங்கை நிறுத்தி விட்டு வந்துக் கொண்டிருக்கும் நிலையில், எஸ்.ஏ. சந்திரசேகர் வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் மனைவியுடன் துபாய்க்கு வந்து விட்டேன். என்னால் வர இயலாது என்றும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல் என்றும் கூறியுள்ளார்.

விஜய் இரங்கல் தெரிவிப்பாரா?: நடிகர் விஜய் சென்னையில் இருக்கிறாரா அல்லது தளபதி 68 படத்தின் படப்பிடிப்பில் உள்ளாரா? விஜயகாந்தை மருத்துவமனையில் வந்து சந்திக்காத நடிகர் விஜய் அவர் மறைந்த நிலையில், அஞ்சலி செலுத்துவாரா? அல்லது ட்விட்டரில் இரங்கலாவது தெரிவிப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X