விஜய் என்ன சூப்பர் ஸ்டாரா?.. லோகேஷ் கனகராஜை டோட்டல் டேமேஜ் செய்த எஸ்.ஏ. சந்திரசேகர்!

சென்னை: எழில் இயக்கத்தில் உருவாகி வரும் தேசிங்கு ராஜா 2 படத்தின் விழாவில் கலந்து கொண்டு பேசிய எஸ்.ஏ. சந்திரசேகர் துள்ளாத மனமும் துள்ளும், துப்பாக்கி படங்களை இயக்கிய இயக்குநர்களை பாராட்டி பேசினார். அதே நேரத்தில் சமீபத்தில், விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜை தாக்கிப் பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விஜயகாந்த், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த எஸ்.ஏ. சந்திரசேகர் தனது மகன் விஜய்யை சினிமாவில் நடிகராக அறிமுகப்படுத்தி பல படங்களை அவருக்காக இயக்கி அவரை சினிமாவில் பெரிய ஆளாக வளர்த்து விட்டார்.

Vijay father SA Chandrasekar criticize Lokesh Kanagarajs Leo movie

அப்பா - மகன் பிரச்சனை: ஆனால், சமீப ஆண்டுகளாக விஜய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பெரிய பிரச்சனையே வெடித்தது. தனது பெயர், படங்களை தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் பயன்படுத்தக் கூடாது என கூறியிருந்தார். தொடர்ந்து அப்பாவிடம் பேசுவதை தவிர்த்து வந்த விஜய் சமீபத்தில் அவர் அறுவை சிகிச்சை பெற்றதை அறிந்து ஓடி வந்து பார்த்தார். அதன் பின்னர், இருவருக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடு மறைந்து விட்டதாகவே ரசிகர்கள் நினைத்தார்கள்.

லியோ படத்தை கழுவி ஊத்திட்டாரு: முன்பெல்லாம் இயக்குநர்கள் நல்ல கதை மற்றும் எந்த ஹீரோ நடித்தாலும் ஓடக் கூடிய திரைக்கதைகளை உருவாக்கி விட்டு படம் எடுப்பார்கள். ஆனால், இப்போதெல்லாம் ஹீரோ கிடைத்து விட்டால் போதும் என குப்பை கதைகளை படங்களாக எடுத்து வருகின்றனர். சமீபத்தில் ஒரு இயக்குநருக்கு போன் போட்டு பேசினேன். படத்தின் ஃபர்ஸ்ட் காப்பியை பார்த்து விட்டு படத்தின் முதல் பாதி தரமாக உள்ளது. ஒரு படம் எப்படி எடுக்க வேண்டும் என்பதற்கு இதுதான் உதாரணம் என்றேன். அவர் மகிழ்ச்சியாக கேட்டுக் கொண்டிருந்தார்.

அப்பாவே குழந்தையை பலி கொடுக்க மாட்டாங்க: அதன் பின்னர், இரண்டாம் பாதி சரியில்லை என்றும் அந்த மதத்தில் அப்படியொரு மூட நம்பிக்கை இல்லை என பேசத் தொடங்கினேன். சார் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். பிறகு போன் பண்றேன் என வச்சுட்டாரு.. அதன் பின்னர் போன் பண்ணவில்லை. படம் வெளியாவதற்கு 5 நாள் முன்னாடியே சொல்லிட்டேன். படம் ரிலீஸ் ஆன பின்னர் அனைவரும் விமர்சனங்களில் அதையே சொல்லி கழுவி ஊத்திட்டாங்க என எஸ்.ஏ. சந்திரசேகர் லியோ மற்றும் லோகேஷ் கனகராஜ் பெயரை சொல்லாமல் வெளுத்து வாங்கி விட்டார்.

ஹீரோவே தலையை வெட்டலாமா?: லியோ படத்தை மட்டுமின்றி விக்ரம் படத்தில் விஜய்சேதுபதி, சூர்யா என ஹீரோக்களையே வைத்து தலையை வெட்டுவது போன்ற காட்சிகள் எடுக்கலாமா? என்றும் மாஸ்டர் படத்தில் ஹீரோவை குடிகாரனாக காட்டியது குறித்தும் மறைமுகமாக தாக்கி விமர்சித்துள்ளார் எஸ்.ஏ. சந்திரசேகர்.

அப்போ விஜய் சூப்பர் ஸ்டார் இல்லை: எழில் இயக்கத்தில் வெளியான துள்ளாத மனமும் துள்ளும் படம் என்ன மாதிரியான படம். அந்த படத்திற்கு பிறகு தான் விஜய்க்கு கேரளாவில் ரசிகர்கள் கிடைத்தனர். துப்பாக்கி படத்தில் ஏ.ஆர். முருகதாஸ் நான் ஸ்லீப்பர் செல் பற்றி கேட்ட கேள்விக்கு படத்தில் பதில் கொடுத்து அசத்தியிருந்தார் என பாராட்டி பேசினார் எஸ்.ஏ. சந்திரசேகர்.

3 நிமிஷமாவது: 3 மணி நேரம் படத்தில் 3 நிமிஷமாவது நல்ல கருத்துக்களை சொல்லுங்கள். கதை மற்றும் திரைக்கதையே இல்லாமல் பெரிய ஹீரோக்களை வைத்து படம் இயக்கி ரசிகர்களை ஏமாற்ற வேண்டாம் என எஸ்.ஏ. சந்திரசேகர் லோகேஷ் கனகராஜை டோட்டல் டேமேஜ் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X