விஜய் சூப்பர் ஸ்டாரா? வில்லங்கமான கேள்வி கேட்ட செய்தியாளர்.. டென்ஷனான எஸ்.ஏ.சந்திரசேகர்!
சென்னை : நான் கடவுள் இல்லை திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் வில்லங்கமாக கேள்வி கேட்ட செய்தியாளரால் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் கோபம் அடைந்தார்.
எஸ்.ஏ.சந்திர சேகர் ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களை வைத்து பல படத்தை இயக்கி உள்ளார்.
சட்டம் ஒரு இருட்டறை என்ற படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார் எஸ்ஏசி, பெரும்பாலும் சமூக கருத்துக்கள் மேலோங்கி இருக்கும் படங்களை இயக்கி உள்ளார்.

எஸ்.ஏ.சந்திரசேகர்
எஸ்.ஏ.சந்திரசேகர் கடைசியாக ஜெய் நடிப்பில் வெளியான கேப்மாரி என்ற படத்தை இயக்கினார். இதையடுத்து, சமுத்திரக்கனி ஹீரோவாக நடித்து இருக்கும் நான் கடவுள் இல்லை என்ற படத்தை இயக்கியுள்ளார். அதிரடி ஆக்ஷன் கதை களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் இனியா மற்றும் சாக்ஷி அகர்வால் , சரவணன், ரோகினி, இமான் அண்ணாச்சி ஆகியோர் நடித்துள்ளனர்.

நான் கடவுள் இல்லை
ஸ்டார் மேக்கர் சென்ற நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி உள்ள நான் கடவுள் இல்லை டீசர் அண்மையில் வெளியாகி மக்களிடம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. இப்படம் நாளை திரையரங்கில் வெளியாக உள்ளது. இதில் சமுத்திரக்கனி அதிரடியாக சிபிஜ அதிகாரியாக நடித்துள்ளார். பருத்திவீரன் பட நடிகர் சரவணன் படுமோசமான வில்லனாக நடித்துள்ளார். இனியா சமுத்திரக்கனியின் மனைவியாகவும், சாக்ஷி அகர்வால் காவல்துறை அதிகாரியும் நடித்து சண்டைக காட்சியில் மிரட்டி உள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பு
நான் கடவுள் இல்லை திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில், நான் கடவுள் இல்லை படத்தின் டிரைலர் வீடியோ வெளியிடப்பட்டது. அந்த வீடியோவைப் பார்த்த செய்தியாளர் ஒருவர், இந்த வீடியோவில் ஸ்டார் லோகோவிற்கு அருகில் விஜய்யின் புகைப்படத்தை வைத்தது ஏன் என்றும், விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்று சொல்ல வரீங்களா என்று கேட்டார்.

டென்ஷனான எஸ்.ஏ.சந்திரசேகர்
செய்தியாளரின் இந்த கேள்வியால் டென்ஷனான எஸ்.ஏ.சந்திரசேகர், இந்த வீடியோவில் நான் விஜய்யின் புகைப்படத்தை மட்டும் காட்டவில்லை,நான் அறிமுகம் செய்த அனைத்து நடிகர்களையும் காட்டினேன், கடைசியாக நான் அறிமுகம் செய்த ஹீரோ அவர் என்பதாலும், என்னுடைய பேனர் என்பதாலும் என் மகனின் போட்டோவை வைத்துக்கொண்டேன் அவ்வளவு தான் என்றார்.

தயவு செய்து அந்த கேள்வி கேட்காதீங்க
தொடர்ந்து செய்தியாளர் அதைப்பற்றியே கேட்டுக்கொண்டு இருந்ததால் டென்ஷனான எஸ்ஏசி, ஒரு படத்தின் செய்தியாளர் சந்திப்பு என்றால் அந்த படத்தை பற்றி கேளுங்கள். தயவு செய்து படத்திற்கு தொடர்பு இல்லாத, தேவையில்லாத கேள்வியை கேட்க வேண்டாம் என்றார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஆர்வி உதயகுமார்,கே.எஸ்.ரவிக்குமார், சாக்ஷி அகர்வால் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications











