எவ்ளோ வயசானாலும் அப்பா அப்பாதான்.. கலங்கியபடி அஜித்திற்கு ஆறுதல் கூறிய விஜய் அப்பா

சென்னை: அஜித்தின் அப்பா உயிரிழந்ததற்கு விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் கலங்கியபடி அஜித்திற்கு ஆறுதல் கூறினார்.

தமிழின் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்குமாரின் தந்தை பெயர் சுப்ரமணியம். தாயின் பெயர் மோகினி. அஜித்துக்கு அனுப் குமார் என்ற அண்ணனும், அனில் குமார் என்ற தம்பியும் இருக்கின்றனர்.

அஜித்தின் தந்தை சுப்ரமணியம்

அஜித்தின் தந்தை சுப்ரமணியம்

அஜித்தின் தந்தையான சுப்ரமணியம் பாலக்காட்டில் பிறந்து வளர்ந்த தமிழர் ஆவார். படிப்பில் ஆர்வம் இல்லாவிட்டாலும் நல்ல உத்தியோகம் பார்த்த சுப்ரமணியம் கொல்கத்தாவின் மோகினி என்பவரை காதல்த்து திருமணம் செய்துகொண்டார். தனது மகன்களை அவர்கள் போக்கில் சுதந்திரத்தோடு வளர்த்தவர் சுப்ரமணியம். அதனால்தான் படிப்பில் நாட்டம் இல்லாவிட்டாலும் இந்தியாவே அறிந்திருக்கும்வகையில் சிறந்த நடிகராக வலம் வருகிறார் அஜித்குமார். அஜித் போலவே அவரது சகோதரர்களும் நல்ல நிலையிலேயே இருக்கின்றனர்.

அஜித்தின் தந்தை மரணம்

அஜித்தின் தந்தை மரணம்

அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் சில வருடஙக்ளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவர்கள் இவ்வளவு நாள்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்துவந்தனர். ஆனால் இன்று காலை சிகிச்சை பலனின்றி பெசன்ட் நகர் வீட்டில் சுப்ரமணியம் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பை அடுத்து பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துவருகின்றனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் நேரில் சென்று சுப்ரமணியம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அஜித்திற்கு எஸ்.ஏ.சந்திரசேகர் ஆறுதல்

அஜித்திற்கு எஸ்.ஏ.சந்திரசேகர் ஆறுதல்

அஜித்தின் போட்டியாளர் என்று கருதப்படுபவர் விஜய். இருவரும் ஒரே காலகட்டத்தில் நடிக்க வந்து தற்போது பெரும் ஸ்டார்களாக உயர்ந்து நிற்கின்றனர். இந்தச் சூழலில் அஜித்துடைய தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அஜித்திற்கு ஆறுதல் தெரிவித்திருக்கிறார் விஜய்யின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர். இதுகுறித்து அவர் கூறுகையில், " நடிகர் அஜித்குமாரின் தந்தை மரணமடைந்த செய்தியை கேட்டு வருத்தமடைகிறேன்.

எவ்ளோ வயசானாலும் அப்பா அப்பாதான்

எவ்ளோ வயசானாலும் அப்பா அப்பாதான்

எவ்ளோ வயசானாலும் அப்பா அப்பாதான். அந்த இழப்பு ஒரு மகனுக்கு எவ்வளவு பெரிய இழப்பு என்பது எல்லா பிள்ளைகளுக்கும் தெரியும். அப்படி தந்தையை இழந்திருக்கும் அஜித்துக்கு மன ஆறுதலை தர வேண்டும் என இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என கலங்கியபடி கூறினார். மேலும் பேசிய அவர், நேரில் சென்று அஞ்சலி செலுத்தவில்லை. இப்போதுதான் பெங்களூரில் நான் இறங்கியிருக்கிறேன் என்றார்.

தகனம் செய்யப்பட்டது அஜித் தந்தையின் உடல்

தகனம் செய்யப்பட்டது அஜித் தந்தையின் உடல்

முன்னதாக அஜித்குமாரின் தந்தை உடல் பெசன்ட் நகரில் இருக்கும் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. வீட்டிலிருந்து சாதாரண ஆம்னி வேனில் நடந்த இறுதி ஊர்வலத்தில் அஜித்தும் அவரது குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொண்டனர். மின்மயானத்தின் வாசலில் இருந்து தந்தையின் உடலை அஜித் சோகத்துடன் சுமந்து சென்றார். சுப்ரமணியத்தின் இறுதிச்சடங்கில் அஜித் மற்றும் அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் கலந்துகொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X