விஜய் மாநாடு குறித்த கேள்வி.. எஸ்.ஏ. சந்திரசேகர் நைஸாக வெங்கட் பிரபுவை கோர்த்து விட்டுட்டாரே!

சென்னை: விஜய் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பை விட விஜய் நடத்தப் போகும் அரசியல் மாநாட்டுக்கான எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்களிடம் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ்நாடும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. வேட்டையன் படத்தை விஜய் ரசிகர்கள் டிசாஸ்டர் ஆக்க திட்டமிட்டு நெகட்டிவிட்டியை பரப்பிய நிலையில், விஜய் மாநாட்டுக்கு எதிரான நெகட்டிவிட்டியை பரப்ப ரஜினிகாந்த் ரசிகர்கள் ரெடியாகி வருகின்றனர்.

நடிகர் விஜய் கடைசியாக தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்கு பிறகு சினிமாவில் இனிமேல் நடிக்க மாட்டேன் என்றும் மக்களுக்கு சேவை செய்ய அரசியல் கட்சியை ஆரம்பித்து அதில் தீவிரம் காட்டப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

vijay sa chandrasekhar venkat prabhu

தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கியுள்ள விஜய் தனது முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், அதுதொடர்பான கேள்வியை எஸ்.ஏ. சந்திரசேகரை சந்தித்த செய்தியாளர்கள் எழுப்ப அதற்கு தக் லைஃப் பதில் அளித்துள்ளார் விஜய்யின் அப்பா.

மாநாடு நடக்கும் இடத்தில் மழை: சென்னையை அடுத்து விக்கிரவாண்டியில் விஜய்யின் முதல் அரசியல் மாநாடு பிரம்மாண்டமாக வரும் அக்டோபர் 27ம் தேதி நடைபெறவுள்ளது. தீபாவளிக்கு விஜய் படம் வெளியாகவில்லை என்றாலும் விஜய்யின் மாநாடு படத்தை காண ரசிகர்கள் மற்றும் ஹேட்டர்கள், அரசியல் கட்சிகள் எல்லாமே ஆவலுடன் காத்திருக்கிறது. பந்தக்கால் நட்ட நிலையில், அந்த இடத்தில் கனமழை பெய்து தண்ணீர் தேங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகின. உடனடியாக அந்த இடத்தை சரி செய்யும் பணிகளை தவெக செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய் அப்பா தக் லைஃப் பதில்: மாநாடு குறித்து உங்களோட கருத்தை சொல்லுங்க என வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல விஜய்யின் அப்பா இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரிடம் கேட்க, மாநாடு பற்றி அவர்கிட்ட கேளுங்க, மாநாடு படத்தை அவர் தான் எடுத்தார் என நைஸாக வெங்கட் பிரபுவை கோர்த்து விட்டார் எஸ்.ஏ. சந்திரசேகர்.

எஸ்கேப்பான வெங்கட் பிரபு: அய்யோ நான் மாநாடு படம் தாங்க எடுத்தேன். அரசியல் பத்தியெல்லாம் நான் என்ன சொல்றது என மைக் தனது பக்கம் திரும்பியதும் கோட் பட இயக்குநர் ஒரேயடியாக ஜூட் விட்டு எஸ்கேப் ஆகிவிட்டார். தீபாவளிக்கு வெளியாகும் புதிய படங்களுக்கு முன்னதாக மாநாடு எப்படி நடக்கப் போகிறது என்றும் விஜய்யின் அரசியல் என்ட்ரி மற்றும் மாநாட்டில் அவரது பேச்சு எப்படி இருக்கும் என்பதை காண அனைவரும் ரெடியாக உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X