வேட்புமனு தாக்கல் செய்த விஜய்.. இதை கவனிக்கத்தான் பலரும் வெயிட்டிங்.. என்னனு தெரியுமா?
சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் வரும் சட்டமன்ற பொதுத் தேர்தலில் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடவுள்ளார். இந்நிலையில் சென்னை பெரம்பூரில் அவர் வேட்புமனு தாக்கல் செய்து முடித்துள்ளார். திருச்சி கிழக்கு தொகுதியில் நாளையோ நாளை மறுநாளோ வேட்புமனு தாக்கல் செய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது வேட்புமனுவில் அவரது சொத்து விவரம் குறித்து அவர் என்னவெல்லாம் குறிப்பிட்டுள்ளார் என்பது குறித்து தெரிந்து கொள்ள பலரும் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இதற்கு காரணம் விஜய் தனது கட்சி மேடைகளில் கெரியரின் உச்சத்தை விட்டுவிட்டு, ஆடம்பர சொகுசு வாழ்க்கையை விட்டுவிட்டு, பல கோடிகள் சம்பளத்தை உதறிவிட்டு மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்த வருகிறேன் என்று பேசி வருகிறார். இதனாலே அவரது சொத்து மதிப்பு குறித்து தெரிந்து கொள்ள பலரும் ஆவலுடன் உள்ளனர்.
விஜய் பெரம்பூரில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு, இன்று முதல் தனது கட்சிக்காக பிரச்சாரம் செய்யவுள்ளார். இதற்கான வேலைகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டுவிட்டன. இப்படி இருக்கையில் அவரது கட்சியினர் பலரும் இன்றே வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். குறிப்பாக ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்ட பலரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். விஜய் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது அவருடன் அவரது கட்சியினர் மற்றும் ஆதரவாளார்கள் என பலரும் இருந்தனர்.
பிரச்சாரம்: வேட்புமனு கொடுத்துவிட்டு விஜய் தனது பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது, திமுவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டியே. எனவே யார் எவ்வளவு வாக்குகள் கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு, அவர்களின் காதிலும் செவுலிலும் விசிலை அடித்து அனுப்புங்கள் என்றும் பேசினார். மேலும் தனது சொகுசான வாழ்க்கையை விட்டுவிட்டு வருகிறேன் என்றும், எனவே தனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கும் படியும் கேட்டுக் கொண்டார். இவரது பேச்சுக்கு ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் ஆரவாரம் கலந்த வரவேற்பு கிடைத்தது. அதேபோல் விஜய் தனது பிரச்சாரத்தில் சில வார்த்தைகளை கத்தி கத்தி பேசிவிட்டு, உடனே கை கூப்பி, சிரித்தபடியே ஒரு வாய்ப்பு கொடுங்க என்று கேட்கிறார். மேலும் அவரது பிரச்சாரத்தை ஜென் - சி கிட்ஸ்களை நோக்கியே முன் வைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











