சீதா ராமம் படத்தின் வாய்ப்பை மிஸ் செய்த விஜய் பட ஹீரோயின்: நல்ல சான்ஸ் இப்போ அம்போன்னு போச்சே!
ஐதராபாத்: துல்கர் சல்மான், ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாகூர் நடிப்பில் வெளியான 'சீதா ராமம்' படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றுள்ளது.
வெளியான மூன்றே தினங்களில் சுமார் 25 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், இந்தப் படத்தில் மிருணாள் தாகூர் கேரக்டரில் நடிக்க முதலில் வேறொரு நடிகைக்கு வாய்ப்பு சென்றுள்ளது.

எதிர்பார்ப்பை மிஞ்சிய வெற்றிய
ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்துள்ள 'சீதா ராமம்' திரைப்படம், 5ம் தேதி வெளியானது. தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியான இப்படத்திற்கு, எதிர்பார்த்ததை விடவும் ரசிகர்களிடம் தரமான வரவேற்பு கிடைத்துள்ளது. ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாகூர் ஆகியோரும் இந்தப் படத்தில் முக்கியமான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பாக்ஸ் ஆபிஸில் அசத்தல்
துல்கர் சல்மான் ராணுவ வீரராக நடித்துள்ள 'சீதா ராமம்' படத்தின் கதை, 1965ம் ஆண்டில் இருந்து தொடங்குகிறது. காதல் பின்னணியில் உருவாகியுள்ள 'சீதா ராமம்', பாக்ஸ் ஆபிஸிலும் அசரடித்து வருகிறது. இதுவரை 25 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், துல்கர் சல்மான் செம்ம கம்பேக் கொடுத்த மகிழ்ச்சியில் உள்ளார்.

மிருணாள் தாகூருக்கு அடித்த ஜாக்பாட்
துல்கர் சல்மானின் காதலியாக சீதா மஹாலக்ஷ்மி என்ற பாத்திரத்தில் மிருணாள் தாகூர் நடித்துள்ளார். பாலிவுட்டில் இருந்து டோலிவுட் பக்கம் திரும்பிய மிருணாளுக்கு, இது சூப்பர் ஜாக்பாட் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். துல்கர் சல்மானுடனான காதல் காட்சிகளில், இருவருக்குமான கெமிஸ்ட்ரி, ரசிகர்களை சிலிர்க்க வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இப்படி ஆகிடுச்சே சிவாஜி
இந்தப் படத்தில் மிருணாள் தாகூர் பாத்திரத்திற்கு முதலில் பூஜா ஹெக்டேவை தான் இயக்குநர் அழைத்துள்ளார். ஆனால், கதையின் மேல் நம்பிக்கையில்லாமல் பூஜா ஹெக்டே மறுத்துவிட்டதாகத் தெரிகிறது, பீஸ்ட், ராதே ஷ்யாம் என வரிசையாக தோல்விப் படங்களில் நடித்து நஷ்டத்தில் இருந்தார் பூஜா ஹெக்டே. ஒருவேளை சீதா ராமம் படத்தில் பூஜா ஹெக்டே கமிட் ஆகிருந்தால், இந்நேரம் அதிர்ஷ்டம் அவரின் தலைமேல் கரகமாக உட்கார்ந்து ஆடியிருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இனிமேல் இப்படி ஆச்சேன்னு ஃபீல் செய்வதில் எந்த பலனும் இல்லை என்றும், ரசிகர்கள் கமெண்ட்ஸ் அடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











