அரசியலுக்கு வந்த பின் விஜய்யின் முதல் பேட்டி.. ஜனநாயகன் பற்றி ஓபன் டாக்.. கிங் மேக்கர்லாம் இல்லையாம்

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார் விஜய். இந்த வருடம் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சி களமிறங்கவிருக்கிறது. இது ஒருபக்கம் இருக்க ஹெச்.வினோத் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் சென்சார் பிரச்னையால் ரிலீஸாகாமல் இருக்கிறது. இந்நிலையில் அரசியலுக்கு வந்த பிறகு முதன்முறையாக பேட்டி கொடுத்திருக்கிறார் விஜய். அதில் தனது அரசியல் பிரவேசம் முதல் ஜனநாயகன் பிரச்னை வரை பல விஷயங்களுக்கு பதிலளித்ததாக தெரிகிறது.

நடிகர் விஜய் சில வருடங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியல் பிரவேசம் செய்தார். அப்போதிருந்து விஜய்க்கு சங்கடமான சூழ்நிலைகளே நிலவிவருகின்றன. 'உங்கள் விஜய் நா வரேன்' என்கிற பெயரில் அவர் நடத்திய அரசியல் சுற்றுப்பயணத்தின்போது கரூரில் 41 பேர் உயிரிழந்தார்கள். அதுகுறித்த சிபிஐ விசாரணை வளையத்தில் இப்போது வந்திருக்கிறார் அவர். பலரும் பலவிதமான விமர்சனத்தை அவர் மீது வைத்துவருகிறார்கள்.

விஜய்யின் முதல் பேட்டி: அதேபோல் ஜனநாயகன் படமும் ரிலீஸாகாமல் முடங்கியிருக்கிறது. இப்படி பல பிரச்னைகள் இருக்கும் சூழலில் எது பற்றியும் அவர் வாய் திறக்காததும் விமர்சனத்தை கிளப்பியது. முக்கியமாக கட்சி ஆரம்பித்ததிலிருந்து பேட்டியும் கொடுக்காமல், செய்தியாளர்களையும் சந்திக்காத ஒருவரையும் இப்போதுதான் பார்க்கிறோம் என்ற கிண்டல்களும் எழுந்தன. இந்நிலையில் தனியார் ஆங்கில ஊடகத்துக்கு முதன்முறையாக பேட்டி கொடுத்திருக்கிறார் விஜய்.

Vijay Finally Breaks Silence on Jana Nayagan Delay Karur Stampede in His Recent Interview
Photo Credit:

பேட்டியில் விஜய் சொன்னது: அவர் அந்தப் பேட்டியில் பேசுகையில், "தேசிய ஊடகங்களுடன் நான் செய்யும் முதல் நேர் காணல் இதுதான். இதை ஒரு மாதிரி நேர்காணல் என்றுதான் நான் சொல்வேன். போதுமான அளவு நான் பேசுவதில்லை என மக்கள் கருதுகிறார்கள் என எனக்கு தெரியும். அதேசமயம் நான் எனது உரைகள் மூலம் பேசுகிறேன். எப்போதும் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். நான் கிங் மேக்கர் இல்லை. எதிர்காலத்துக்காகவும், வெற்றி பெறுவதற்காகவும் போராடுகிறேன். நான் சண்டை போட்டு வெல்வேன். எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர்தான் எனக்கு ரோல் மாடல்கள்" என கூறினார்.

தன்னம்பிக்கை குறைவா?: அவரிடம், நேரடியாக பதிலளிக்க தயக்கப்படுகிறீர்கள், தன்னம்பிக்கை உங்களிடம் குறைவாக இருக்கிறது என பலர் சொல்கிறார்களே என்ற கேள்வி முன்வைக்கப்பட்டதற்கு, அதில் உண்மை இல்லை. இன்று அனைத்து கேள்விகளுக்கும் நிதானமாகவும், தெளிவாகவும் நான் பதிலளித்தேன். நான் இங்கு ஏன் இருக்கிறேன் என்பதில் எந்த குழப்பமும் இல்லை. சினிமாவை முழு மனதோடு விட்டுவிட்டேன். இதுதான் எனது எதிர்காலம் என்றார்.

ஜனநாயகன் பற்றி: மேலும் ஜனநாயகன் பிரச்னை பற்றியும், அரசியல் பிரவேசம் பற்றியும் கேட்கப்பட்ட கேள்விக்கு, 'கோவிட்டுக்கு பிறகே நான் அரசியலில் ஈடுபவது குறித்து தீவிரமாக யோசித்துவருகிறேன். இது திடீரென எடுத்த முடிவு இல்லை. எனது அரசியல் வருகையால் ஜனநாயகன் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதனால் தயாரிப்பாளரை நினைத்து நான் வருத்தப்படுகிறேன். அரசியல் வருகையால் எனது திரைப்படங்கள் பாதிக்கப்படலாம் என்று நினைத்தேன். அத்ற்காக மனதளவிலும் தயாராக இருந்தேன்" என பதிலளித்தார்.

கரூர் துயரம் பற்றி: கரூரில் நடந்த துயர சம்பவம் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, 'அந்த சம்பவம் எனக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. அதை முழுமையாக புரிந்துகொள்ள எனக்கு சிறிது நேரம் எடுத்துக்கொண்டது. அந்த விஷயம் இன்னும் என்னை துரத்திக்கொண்டே இருக்கிறது. அதை நினைத்தாலே மனம் வேதனைப்படுகிறது' என்றார். இந்தப் பேட்டி ஆஃப் கேமரா(கேமராவால் ஒளிப்பதிவு செய்யப்படாதது) பேட்டி என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X