Vijay: வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டிய நேரத்தில்.. மும்பை பறந்த விஜய்.. எல்லாம் நல்ல விஷயம் தான்!
மும்பை: நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் இருக்கும் டாப் நடிகர்களில் ஒருவர். இன்னும் சொல்லப்போனால் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர். இவரது நடிப்பில் உருவாகி உள்ள ஜன நாயகன் படம் விரைவில் வெளியாகும் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராகவும் விஜய் உள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி அதாவது சரியாக 34 நாட்களே உள்ள நிலையில் நடிகர் விஜய் மும்பைக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
அதாவது, தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாடு அரசியல் களத்தில் முதன் முதலாக தேர்தலில் போட்டியிட உள்ளது. இதனால் தமிழ்நாடு அரசியல் களம் பெரும் பரபரப்பில் உள்ளது. விஜய் தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று கூறப்படுகிறது. இப்படி இருக்கும் போது மற்ற கட்சிகள் எல்லாம் கூட்டணி பேச்சுவார்த்தைகளை முடிவு செய்து, தொகுதிப் பங்கீடு, அடுத்த கட்டமாக வேட்பாளர் தேர்வு என பரபரப்பாக இயங்கி வருகிறது. இப்படி இருக்கையில் நடிகர் விஜய் தனது கட்சியில் வேட்பாளர்களை தேர்வு செய்து கொண்டு இருப்பார் என்று, அவரது ரசிகர்களும் தொண்டர்களும் நினைத்துக் கொண்டு இருக்கும் போது, நடிகர் விஜய் மும்பைக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

பிரியா அட்லீ வளைகாப்பு: அதாவது நடிகர் விஜய் இந்த பரபரப்பான தேர்தல் நேரத்தில் மும்பைக்கு புறப்பட்டுச் சென்றதற்கு காரணமே, இயக்குநர் அட்லீ - பிரியா அட்லீ தம்பதியரின் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு தான். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் ஷாரூக் கான், அல்லு அர்ஜுன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர் என்றும், தமிழ் திரைப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டார்கள் என்றும் கூறப்படுகிறது.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு: நடிகர் விஜய் வேட்பாளர்களை தேர்வு செய்து, பிரச்சாரத்தில் களமிறங்குவதை விட்டுவிட்டு இது போன்ற நேரத்தில் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறாரே என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதேபோல் அட்லீ மற்றும் அவரது மனைவி பிரியா அட்லீ என இருவர் மீது விஜய்க்கு அளவு கடந்த பாசம் உள்ளது. அதனால் தான் இப்படியான பரபரப்பான சூழலிலும் விஜய் அவர்களின் வளைகாப்பு நிகழ்ச்சிக்குச் சென்றுள்ளார் என்று பேசி வருகிறார்கள்.



Click it and Unblock the Notifications











