ரசிகர்களின் அன்பில் மிதந்த விஜய்.. வைரலாகும் வீடியோ!
விஜய்யின் திட்டத்தை விஜய் ரசிகர்களே முறியடித்துள்ளனர் .
Recommended Video

சென்னை: நடிகர் விஜய் ரசிகர்களின் அன்பில் மிதந்த வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் தற்போது சர்க்கார் திரைப்பட ஷுட்டிங்கை முடித்து அட்லி இயக்கும் அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார்.

தெளிவான பார்வை, நிதானமான பேச்சு, தொலைநோக்கு சிந்தனை, தன்னுடைய ரசிகர்களை விஜய் மக்கள் இயக்கம் மூலம் சமூக மேம்பாட்டிற்காக பயன்படுத்துவது போன்ற காரணங்களால் திரையில் மட்டுமல்லாமல் தரையிலும் வெகுவாக விரும்பக்கூடிய மனிதராக வலம் வருகிறார் விஜய்.
ரஜினி கமல் போல் காலம் தாழ்த்தாமல் சீக்கிரமாக அரசியலுக்கு அவர் வர வேண்டுமென ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த நிலையில் புதுவை மாநிலத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்வில் கலந்துகொண்டார் விஜய்.
விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவராக இருக்கும் ஆனந்த் என்பவரின் திருமணத்திற்க்கு தன் மனைவி சங்கீதாவுடன் வருகை தந்த அவருக்கு, ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருமண விழாவின்போது விஜய் அங்கே இருந்தால் அது மற்றவர்களுக்கு தொந்தரவாக இருக்கும் என எண்ணி, திருமண விழாவை விஜய் ரசிகர்களின் விழாவாக மாறிவிடக்கூடாது என திட்டமிட்டு, நிகழ்ச்சி ஆரம்பமாவதற்கு முன்பே வந்துள்ளார் விஜய். ஆனால் ரசிகர்கள் அவரை அன்புக்கடலில் தத்தளிக்க வைத்து திருமண அரங்கையே விஜய் ரசிகர்களின் கொண்டாட்ட அரங்காக மாற்றிவிட்டனர்.


Click it and Unblock the Notifications











