75, 50 வருட மரங்கள்.. மக்கள் சக்தி என்னும் விசையால் வேருடன் பிடுங்கி எறியப்படுமாம்.. ஆதவ் அர்ஜுனா!

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து பாக்ஸ் ஆபீஸ் கிங்காக உயர்ந்த விஜய் இனிமேல் எனக்கு இதெல்லாம் வேண்டாம் அரசியல் பக்கம் போகிறேன் என சென்ற நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்தார்.

இந்த தேர்தலில் விஜய் போட்டியிட மாட்டார், 234 தொகுதிகளிலும் நிறுத்த வேட்பாளர்கள் கிடைக்க மாட்டார்கள், அதிகபட்சம் 2 சதவீதம் ஓட்டு வராது என ஏளனம் பேசியவர்கள், கடைசியில் விஜய் கண்டிப்பாக சிஎம் ஆக வாய்ப்பே இல்லை என சொல்லும் அளவுக்கு அவரது அரசியல் வளர்ச்சி அசுரத்தனமாக உள்ளது.

Vijay force sweeps 70 and 50 Year Old Parties in Tamil Nadu says Aadhav Arjuna

விஜய்க்கு பக்க பலமாக புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் மாற்றம் வருமா? அல்லது ஸ்டாலின் ஆட்சியே தொடரட்டும் என மக்கள் வாக்கு செலுத்தியுள்ளார்களா என்பது இன்று தெரிந்துவிடும். இந்நிலையில், தீர்ப்பு நாளில் அதிகாலையிலேயே ஆதவ் அர்ஜுனா ரொம்பவே கான்ஃபிடன்ட்டாக "மக்கள் சக்தி என்னும் விசை" என பதிவிட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.

ஆதவ் அர்ஜுனா ட்வீட்: "தமிழ்நாட்டில் இன்று காலை உருவாகும் 'மாற்றத்திற்கான புயல்' நாள் முழுவதும் வீறு கொண்டு வீசும்! சரியாக, மாலை 7 மணிக்கு 'தேர்தல் முடிவுகள்' எனும் அந்தப் புயல் கரையைக் கடக்கும்போது, அதன் வேகத்தில் 75 வருடங்கள், 50 வருடங்கள் என ஆதிக்கம் செலுத்தித் தூர்ந்து போன பழைய மரங்கள் மக்கள் சக்தி என்னும் விசையால் வேருடன் பிடுங்கி எறியப்படும்! மன்னாராட்சி மரபு முடிவுக்கு வரும்! பிறப்பால் இனி யாரும் முதல்வராக முடியாது!

தமிழ்நாட்டின் அரசியல் மாற்றத்திற்கான புதிய வரலாறு இன்று முதல் தொடங்கும்" என ஆதவ் அர்ஜுனா பதிவிட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.

முதலமைச்சரா? எம்எல்ஏவா?: சினிமாவில் ஆரம்ப காலத்தில் இருந்தே பல தோல்விகளை சந்தித்து தான் விஜய் தனக்கான இடத்தை பிடித்தார். ஆனால், மிகப்பெரிய ரசிகர் படையுடன் அரசியலுக்கு வந்துள்ள விஜய் முதல் முறையே ஆட்சியை பிடிப்பேன் என உறுதியாக கூறிய நிலையில், எக்ஸிட் போல் முடிவுகளில் சில அவருக்கு சாதகமாகவும் வந்தது பலரையும் ஆச்சர்யத்திலும் கலக்கத்திலும் ஆழ்த்தியுள்ளது. பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என 2 இடங்களில் போட்டியிட்டுள்ள விஜய் எம்எல்ஏவாக 2 தொகுதிகளிலும் வெல்வாரா? விஜய்யின் தவெக அதிக இடங்களில் வென்று விஜய் முதலமைச்சர் ஆவாரா? என்பது இன்று தெரிந்துவிடும். எதுவாக இருந்தாலும் விஜய்க்கு வெற்றி தான் என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X