'விஜய்யைப் பார்க்கணும்'... தேசிய விருது பெற்ற சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய விஜய்!
தேசிய விருது பெற்ற குழந்தை நட்சத்திரமான ஆதிஷ் பிரவீணின் ஆசையை நிறைவேற்றி வைத்தார் நடிகர் விஜய்.
இந்த ஆண்டு மத்திய அரசின் சிறந்த குழந்தை நட்சத்திர விருது மலையாள படத்தில் நடித்ததற்காக ஆதிஷ் பிரவீணுக்கு அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்த பத்திரைகையாளர்கள் சந்திப்பின்போது அனைவரும் ஆதீஷிற்கு வாழ்த்து சொன்னார்கள்.
ஆனால் ஆதீஷோ, "எனக்கு இந்த விருது கிடைத்ததை விட, இதை நடிகர் விஜய் சார் கையில் கொடுத்துப் பெற வேண்டும் என்பதே என் ஆசை," என்று கூறியிருந்தார்.
இந்த தகவல் விஜய்க்குத் தெரிவிக்கப்பட்டது. விஜய் உடனே ஆதிஷை சந்திக்க ஏற்பாடு செய்யும்படி கூறியிருக்கிறார்.
அதன்படி விஜய்யைச் சந்திக்க ஆதிஷை அழைத்து வந்தனர் இந்த சந்திப்பின்போது இருவரும் மலையாளத்தில் பேசி மகிழ்ந்திருக்கிறார்கள். இன்னும் பல விருதுகளை பெற வேண்டும் என்று வாழ்த்திய விஜய்யுடன் சிறுவன் ஆதிஷ் செல்ஃபி எடுத்துக் கொண்டு விடைபெற்றான்.


Click it and Unblock the Notifications











