பீஸ்ட் படத்தில் விஜய்யின் கெட்டப் இதுதான்.. ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியான கட்டிப்பிடி போட்டோ!

சென்னை: பீஸ்ட் படத்தில் நடிக்கும் விஜய்யின் கெட்டப் குறித்த போட்டோ வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் இயக்குநர் நெல்சன் கூட்டணியில் உருவாகும் படம் பீஸ்ட். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தில் பூஜா ஹெக்டே, அபர்ணாதாஸ், விடிவி கணேஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

பீஸ்ட் போஸ்டர்கள்

பீஸ்ட் போஸ்டர்கள்

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 21 ஆம் தேதி மாலை மற்றும் நள்ளிரவு 12 மணிக்கு பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியானது.

பழிவாங்கும் கதை

பழிவாங்கும் கதை

இதில் கையில் துப்பாக்கியுடன் மிரட்டலாக இருந்தார் நடிகர் விஜய். விஜய்யின் இந்த லுக் ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலானது. அதோடு படத்தின் டைட்டிலும், பழி வாங்கும் கதையாக படம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

படப்பிடிப்புக்கு அனுமதி

படப்பிடிப்புக்கு அனுமதி

கொரோனா இரண்டாவது அலை காரணமாக கடந்த 2 மாதங்களாக படப்பிடிப்புகள் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது தமிழக அரசு படப்பிடிப்புக்கு அனுமதி கொடுத்துள்ளது.

பீஸ்ட் படப்பிடிப்பு தொடக்கம்

பீஸ்ட் படப்பிடிப்பு தொடக்கம்

இதனை தொடர்ந்து படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளன. அந்த வகையில் விஜய்யின் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியார் படப்பிடிப்பு தளத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடங்கியது.

Recommended Video

Vijay Unknown Facts | Vijay வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு? | Vijay Biography | Filmibeat Tamil
டான்ஸ் மாஸ்டர்

டான்ஸ் மாஸ்டர்

இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து போட்டோ ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஷூட்டிங் ஸ்பாட்டில் படத்தின் டான்ஸ் மாஸ்டர் ஜானிக்கு பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர்.

கட்டி அணைத்த விஜய்

கட்டி அணைத்த விஜய்

அப்போது நடிகர் விஜய், ஜானி மாஸ்டரை கட்டி அணைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதேபோல் படத்தின் இயக்குநரான நெல்சன் பூங்கொத்து கொடுத்து ஜானிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தாடியுடன் உள்ள விஜய்

தாடியுடன் உள்ள விஜய்

இதில் விஜய் தாடியுடன் ஸ்பெக்ஸ் அணிந்துள்ளார். இந்த புகைப்படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் படத்தில் விஜய்யின் கெட்டப் இதுதானா என கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X