கோட் படப்பிடிப்பில் விஜய் என்ன செய்தார் தெரியுமா? பயத்தில் நடுங்கிய மேக்கப் மேன்.. செட்டே அமைதி!

சென்னை: தமிழ் சினிமாவின் தவிர்கக முடியாத நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் நடிகர் விஜய்.
கோட் திரைப்படம் மூலம் மீண்டும் தான் ஒரு வசூல் சக்கரவர்த்தி என்பதை நிரூபித்து காட்டி இருக்கிறார் விஜய். இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில்,கோட் படப்பிடிப்பின் போது தளபதி விஜய் நடந்து கொண்ட விதம் குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த லியோ திரைப்படம் வசூலில் எப்பவும் போல மாஸ் காட்டினாலும் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை தான் பெற்றது. அதன் பிறகு எப்படியாவது ஒரு பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இருந்த நிலையில், வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான கோட் திரைப்படம், ஒரே நாளில் 126 கோடி வசூலித்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது யாரும் நினைத்து கூட பார்க்க முடியாத பெரும் சாதனை, இதை கோட் திரைப்படம் பெற்றிருக்கிறது

goat vijay venkat prabhu

தளபதி விஜய்யின் கோட்: இத்திரைப்படத்தில் விஜய் காந்தி, ஜீவன் என அப்பா மற்றும் மகன் என இரண்டுவிதமான ரோலில் நடித்துள்ளார். மேலும், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், பிரேம்ஜி, வைபவ் என பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் த்ரிஷா மட்ட பாடலுக்கு டான்ஸ் ஆடி இருக்கிறார். இதுவரை எந்த ஒரு படத்திலும் ஒரே ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடாத த்ரிஷா, விஜய்க்காக இந்த படத்தில் நடனமாடி உள்ளார்.

கோவப்பட்ட விஜய்: கோட் படத்திற்கு இசைவெளியீட்டு விழா நடைபெறாத நிலையில், படத்தின் ப்ரோமோஷனுக்காக வெங்கட் பிரபு பல சேனல்களுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில், கோட் படப்பிடிப்பின் போது விஜய் கோவப்பட்டது குறித்து பேசி உள்ளார். படத்தின் கிளைமாக்ஸ் சண்டை காட்சி எடுத்துக்கொண்டு இருந்தோம். அப்போது, நான் சண்டை முடிந்து வரும் போது வாயில் இருந்து ரத்தத்தை துப்புவது போல இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னேன். அவரும் சரி என்று சொல்லிவிட்டு, மேக்கப் மேனை அழைத்தார். ஆனால், மேக்கப் மேனிடம் டூப்ளிகேட் ரத்தம் இல்லை, உடலில் பூசும் ரத்தத்தை வாயில் வைக்க முடியாது. வாயில் வைப்பதற்கு என்றே தனி ரத்தம் இருக்கு அதை விழுங்கினாலும் ஒன்னும் ஆகாது. இது போன்ற காட்சிக்கு இந்த ரத்தத்தை தான் பயன்படுத்துவோம்.

ஆனால், அப்போது மேக்கப் மேனிடம் அந்த டூப்ளிகேட் ரத்தம் இல்லை. இதனால் விஜய்க்கு சரியான கோவம், ஆனால், அவர் மேக்கப் மேனை அறிவு இருக்கா, அப்படி இப்படி என்று திட்டல, கத்தல, அந்த மேக்கப் மேனை அப்படியே பார்த்துக்கொண்டே இருந்தார். அதைப்பார்த்து மேக்கப் மேன் நடுங்குகிறார், அவர் பார்ப்பதை பார்த்து நாங்களும் அமைதியாக அப்படியே நின்றுவிட்டோம். கொஞ்சநேரம் மேக்கப் மேனை அப்படியே பார்த்துவிட்டு, பிரேக்குக்கு அப்புறம் எடுத்துக்கொள்ளலாமா என்று கேட்டார். அவர் அப்படி பார்த்தது தான் அவருடைய அதிகபட்ச கோபம், விஜய் அப்படித்தான் என்று வெங்கட் பிரபு அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X