முதல் தேர்தலிலேயே இமாலய சாதனை.. விஜய்க்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து மழை!
சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் தமிழக வெற்றிக்கழகத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது. தனிப்பெரும்பான்மை பெறாவிட்டாலும் தனித்துப் போட்டியிட்ட முதல் தேர்தலில் 108 இடங்களை வசமாக்கி தவெகவுக்கு இமாலய சாதனை படைத்துள்ளது. ஆனாலும் ஆட்சியமைக்க 118 எம்எல்ஏக்கள் வேண்டுமென்ற நிலையில், அடுத்ததாக தவெக பக்குவமாகக் காய் நகர்த்த வேண்டிய மிகப்பெரிய சவால் எழுந்துள்ளது. இந்த நிலையில் கட்சி தொடங்கி சில ஆண்டுகளிலேயே மகத்தான சாதனை படைத்த விஜய்க்கு பலர் இணையத்தின் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் தனுஷ்: களத்துக்கு வந்து போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தமிழ்நாட்டு மக்களின் பெரும் ஆதரவையும் அன்பையும் பெற்று ஆட்சியமைக்கவிருக்கும் திரு. விஜய் சார் அவர்களுக்கும் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.
உழைப்புக்கு கிடைத்த பரிசு: நடிகை கீர்த்தி சுரேஷ், நீங்கள் நேசிக்கப்படுவதால் மட்டும் இங்கு வரவில்லை, வெறுக்கப்படுவதாலும் வந்துள்ளீர்கள். அந்தக் கூச்சல்களுக்கும் வெறுப்புகளுக்கும் மத்தியிலும், நீங்கள் ஒருபோதும் கைவிடாமல், எப்போதும் உங்கள் இருப்பை நிலைநிறுத்தினீர்கள். இது தூய கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் மக்கள் மீதான பேரார்வம். நான் முன்பே சொன்னது போல, நீங்கள் ஒரு உணர்வு, இந்த வெற்றி அந்தக் கூற்றுக்கு ஒரு சான்றாகவும், ஒரு புதிய பாரம்பரியத்தின் தொடக்கமாகவும் உள்ளது. ஜோசப் விஜய் சார், இது கடினமாக உழைத்துப் பெற்ற வெற்றி. தளபதி, நீங்கள் இதற்கு முழுமையாகத் தகுதியானவர் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரியல் ஹீரோ: வாய் வழி காற்றை ஊதி, மெழுகுவர்த்தியின் சுடர் அணைத்து, 'happy birthday' சொல்வதைப்போல, விசில் ஊதி சூரியனையே அணைத்து புதிய அரசு விடிகிறது.
விஜயம் யார் வேண்டுமானாலும் செய்யலாம்... ஆனால்,ஜெயம் திரு விஜய் அவர்களால் மட்டுமே அசுர பலத்தோடு நிகழ்த்த முடியும் என்பதற்கு, தமிழக மக்கள் எண்ணிக்கையில் 108 இடங்கள் கொடுத்ததோடு, தங்களின் இதயம் என்கிற இடத்தையே சிம்மாசனமாக்கி அதில் முதல்வராக அமர, விஜய் அவர்களுக்கு அமோக ஆதரவு அளித்திருக்கிறார்கள். இந்த சரித்திர வெற்றியைக் கண்டுள்ள real HERO -வை விசிலடித்து கொண்டாடி வாழ்த்துவோம்.
உண்மையான சக்தி: இயக்குநர் சந்திப் ரெட்டி தனது எக்ஸ் தளத்தில், சினிமாவால் இதைத்தான் செய்ய முடியும். அது மக்களின் மனதை நெகிழச் செய்யும், அமைப்புகளை அசைத்துப் பார்க்கும், மேலும் வெறும் ஒரு 'சக்தியாக' உருமாற்றும். இங்கே, சினிமா திரையை விட்டு வெளியேறி, களத்தை தன் வசப்படுத்தி உள்ளது. இது வெறும் ஆரவாரமல்ல, வெறும் இரைச்சலும் அல்ல. இது உண்மையான சக்தி. விஜய் அவர்களுக்கும், 'தமிழக வெற்றி கழகத்திற்கும் எனது ஆழ்ந்த, மனமார்ந்த நல்வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications