TVK Vijay: தடை.. அதை உடை.. பெரம்பூரில் இருந்துதான் பிரசாரம்.. நினைத்ததை நடத்திக் காட்டும் விஜய்
சென்னை: நடிகர் விஜய் தனது தமிழக வெற்றிக் கழகத்திற்கான தேர்தல் பிரசாரத்தை சென்னை பெரம்பூர் தொகுதியில் இருந்து தொடங்க திட்டமிட்டிருந்தார். அதற்காக முறையாக விண்ணப்பித்தும் தவெகவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக விஜய் குற்றச்சாட்டு எழுப்பினார். இது மட்டுமல்லாமல், தலைமைத் தேர்தல் அதிகாரியான அர்ச்சனா பட்நாயக்கை நேரில் சந்தித்து புகார் அளித்தார். இந்நிலையில் மார்ச் 30ஆம் தேதியில் இருந்து விஜய் தனது பிரசாரத்தை தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவல் தமிழக வெற்றிக் கழகத்தினருக்கும், விஜய் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இது மட்டுமல்லாமல், ரசிகர்கள் பலரும் தளபதி விஜய் ஒரு முறை முடிவு செய்துவிட்டால் அதை மாற்றமாட்டார். அதனால் தான் பெரம்பூரில் இருந்து பிரச்சாரத்தை தொடங்க தீர்க்கமாக காத்திருந்திருக்கிறார் என்று பதிவிட்டு வருகிறார்கள். இது மட்டுமல்லாமல் விஜய் பெரம்பூரில் போட்டியிடவுள்ளார் என்றும் பேச்சுக்கள் அடிபடுகிறது.

28ஆம் தேதி தவெக சார்பில் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு காரணம் தேர்தல் ஆணையத்தின் தரப்பில் சொல்லப்பட்டாலும், விஜய் மற்றும் தவெகவினர் இதற்கு காரணம் திமுகவின் சதி என்று தெரிவித்தனர். இந்நிலையில் மார்ச் 28ஆம் தேதி மாலையில் விஜய் மற்றும் அவரது கட்சியின் முன்னணித் பொறுப்பாளர்கள் தலைமைத் தேர்தல் அதிகாரியான அர்ச்சனா பட்நாயக்கைச் சந்தித்து புகார் மனு அளித்தனர். அத்துடன் இந்த தேர்தலுக்கான அவர்களின் மொத்த பிரச்சார திட்டத்தையும் அளித்ததாக சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











