விஜய்க்கு முதல் பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்த ஆர்பி சவுத்ரி.. ’பூவே உனக்காக’ எல்லாம் மறக்க முடியுமா?

சென்னை: நடிகர் விஜய்யை தமிழ் சினிமாவில் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் அறிமுகப்படுத்தி பல படங்களை இயக்கினாலும் விஜய்க்கு முதல் பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது 'பூவே உனக்காக' படம் தான். தமிழ்நாட்டில் ஏகப்பட்ட ரசிகர்கள் விஜய் ஃபேனாக மாற காரணமே அந்த படம் தான். அந்த படத்தை தயாரித்த ஆர்.பி. சவுத்ரியின் மறையும் நிச்சயம் வெற்றிப் பெற்ற இந்த நிலையிலும், விஜய் மனதை உலுக்கி இருக்கும்.

நடிகர் ஜீவா விஜய்யுடன் நண்பன் படத்தில் நடித்துள்ளார். மேலும், ஜில்லா படத்தின் அறிமுக பாடலுக்கு நடனமாடியுள்ளார். நேற்று விஜய் தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்ற போது கூட உடனடியாக விசில் அடித்து ஆனந்தக் கண்ணீர் சிந்தும் வீடியோவை வெளியிட்டு இருந்தார் ஜீவா.

Vijay gets his first blockbuster movie Poove Unakaga with Late Producer RB Choudary
Photo Credit:

பூவே உனக்காக மட்டுமின்றி தமிழ் சினிமாவில் ரசிகர்கள் இன்றும் டிவியில் போட்டால் உட்கார்ந்து படங்கள் என்றால் இப்படித்தான் எடுக்க வேண்டும் என பார்த்து ரசிக்கும் நாட்டாமை, சூர்ய வம்சம், சுந்தர புருஷன், லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், நீ வருவாய் என, ஆனந்தம், சமுத்திரம் என ஏகப்பட்ட சூப்பர் குட்டான படங்களை தனது சூப்பர் குட் ஃபிலிம்ஸ் மூலம் தயாரித்த ஆர்.பி. சவுத்ரி இப்படி கார் விபத்தில் காலமாவார் என்பதை தமிழ் சினிமா ஒருநாளும் நினைத்திருக்காது.

விஜய் - அஜித் படங்கள்: பூவே உனக்காக தொடங்கி லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், ஷாஜகான், திருப்பாச்சி, ஜில்லா உள்ளிட்ட பல படங்களை விஜய்யை வைத்து தயாரித்தவர் தான் ஆர்.பி. சவுத்ரி. அஜித்தை வைத்து ராஜா, நீ வருவாய் என, உன்னைக் கொடு என்னை தருவேன் உள்ளிட்ட பல படங்களையும் இவர் தயாரித்துள்ளார்.

பூவே உனக்காக படத்தை மறக்க முடியுமா?: நாட்டாமை படத்தின் வெற்றிக்குப் பிறகு சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் 1996ம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் விஜய், சங்கீதா, நம்பியார், நாகேஷ், மலேசியா வாசுதேவன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடிப்பில் வெளியான பிளாக்பஸ்டர் படமான பூவே உனக்காக படத்தை விஜய் ரசிகர்கள் ஒருநாளும் மறக்க மாட்டார்கள். அந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள், கதை, காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் நிறைந்துள்ளது. மதங்களை கடந்து மனங்களை சேர்த்து வைக்க விஜய் போராடுவதை பார்த்து ரசிகர்கள் கொண்டாடினர்.

அஞ்சலி செலுத்த வருவாரா விஜய்?: ஆர்.பி. சவுத்ரி தயாரிப்பில் பல படங்களில் நடித்தவர் விஜய். ஜீவாவின் நெருங்கிய நண்பரும் கூட. மே 7ம் தேதி விஜய் பதவியேற்பதற்கு முன்பாக மே 6ம் தேதி (நாளை) சென்னையில் ஆர்.பி. சவுத்ரியின் உடல் அஞ்சலிக்கு வைக்கப்படும். கண்டிப்பாக தவெக தலைவர் விஜய் தனது அஞ்சலியை நேரில் செலுத்த வருவார் என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X