விஜய் இதைத்தான் பண்ண சொன்னாரா?.. சோறு போடுற இடத்துல போட்டோவோட திரியும் மக்கள் இயக்க நிர்வாகி!

சென்னை: மிக்ஜாம் புயல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் கன மழை பெய்ய காரணமாக மாறிய நிலையில், பலரது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நடிகர்கள் சூர்யா, கார்த்தி, ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட பிரபலங்கள் நிதியுதவி அளித்துள்ளனர். களத்தில் இறங்கி அறந்தாங்கி நிஷா, கேபிஒய் பாலா உள்ளிட்ட சிலர் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

Vijay gets trolled for his VMI members hold his photo while serving free food

மேலும், நடிகர் விஷால், போஸ் வெங்கட் உள்ளிட்ட பிரபலங்கள் குறை சொல்ல ஆரம்பித்து விட்டனர். நடிகர் விஜய் இன்னும் ஏன் அமைதி காத்து வருகிறார் என கேள்விகள் கிளம்பிய நிலையில், தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் களத்தில் ஈடுபட்டு உதவ வேண்டும் என அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

நான் ரெடியில்லை வரமாட்டேன்: தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை உள்ளிட்ட பலர் மக்களை சந்தித்து குறைகளை கேட்டு வருகின்றனர். ஆனால், அரசியலுக்கு வரும் கனவுடன் இருக்கும் நடிகர் விஜய் களத்தில் மக்களுக்காக இறங்காமல் தனது விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு கட்டளை மட்டும் இட்டுள்ளாரே என விமர்சனங்கள் கிளம்பி உள்ளன.

உதவும் ரசிகர்கள்: விஜய் ட்வீட் போடுவதற்கு முன்னதாகவே விஜய் மக்கள் இயக்கத்தினரும் விஜய் ரசிகர்களும் களத்தில் இறங்கி மக்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை அந்த அந்த பகுதிகளில் செய்யத் தொடங்கி விட்டனர். இந்நிலையில், நடிகர் விஜய்யின் அறிக்கை மேலும், பலரை உத்வேகப்படுத்தி களப்பணிகளை செய்யத் தூண்டியுள்ளது.

அன்னதானம்: ஈசிஆர் சரவணன் முதியோர் இல்லத்தில் பசியால் வாடியவர்களுக்கு அன்னதானம் வழங்கிய வீடியோவை சற்றுமுன் வெளியிட்டு இருந்தார். விஜய் மக்கள் இயக்கத்தினர் தளபதி விஜய்யின் ஆணைக்கிணங்க புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு அளித்து வருகிறோம் எனக் கூறியிருந்தார். ஆனால், அந்த வீடியோவில் ஒருவர் விஜய் போட்டோவை தூக்கிக் கொண்டு திரிந்தது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

விஜய் போட்டோ ஏன்?: விஜய் மக்கள் நிர்வாகிகள் அனைவரும் தங்கள் சட்டைகளில் விஜய் போட்டோ போட்ட பேட்ஜ் குத்தியுள்ளனர். அதையும் தாண்டி ஒருவரை விஜய்யின் ஃபிரேம் போட்ட பெரிய சைஸ் போட்டோவை கையில் தூக்கிக் கொண்டு உணவு உண்பவர்கள் முன்னாடி காட்டிக் கொண்டே ஒருவர் செல்வது எல்லாம் எவ்வளவு கேவலமான செயல் என கார்த்திக் ரவிவர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, இதுபோன்றவர்களால் தான் விஜய்க்கு கெட்டப் பெயர் வருகிறது என பதிவிட்டுள்ளார். ரஜினி ரசிகர்கள் எல்லாம் இதைத்தான் விஜய் செய்யச் சொன்னாரா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X