செளந்தரராஜனுக்கு அடித்த ஜாக்பாட்.. விஜய்க்கிட்ட இருந்து இப்படியொரு கிஃப்ட்டா?
சென்னை: அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வெளியான பிகில் படம் வெற்றிகரமாக 4வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது.
பிகில் படத்தில் விஜய் பயன்படுத்திய பிகில் 5 நம்பர் போட்ட ஜெர்சியை நடிகர் செளந்தரராஜனுக்கு கிஃப்ட்டாக விஜய் கொடுத்துள்ளார்.

இந்த சந்தோஷமான செய்தியை பிகில் ஜெர்சியுடன் போட்டோ போட்டு நடிகர் செளந்தரராஜன் விஜய் ரசிகர்களை பொறாமை பட செய்துள்ளார்.
சமூக பணிகளை செளந்தரராஜன், தன்னலமின்றி செய்து வருகிறார் என நடிகர் செளந்தரராஜன் குறித்து பிகில் இசை வெளியீட்டு விழாவில், விஜய் புகழ்ந்து பேசினார்.
அட்லி - விஜய் கூட்டணியில் வெளியான தெறி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த செளந்தரராஜன், பிகில் படத்திலும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
பிகில் படத்தில் ஃப்ளாஷ்பேக்கில் வரும் விஜய், இந்த பிகில் ஜெர்சியுடன் தான் கால்பந்து விளையாடுவார்.
கதிர், யோகி பாபு உள்ளிட்டோர் அவரது அணியில் கால்பந்து விளையாடும் வீரர்களாக இடம்பெற்றிருந்தனர்.
பிகில் என்ற படத்தின் டைட்டிலுக்கு சொந்தமான இந்த ஜெர்சியை நடிகர் செளந்தரராஜனுக்கு விஜய் கிஃப்டாக கொடுத்துள்ளார் என்றால், தளபதியின் நெஞ்சில் எந்த அளவுக்கு அவருக்கு இடம் இருந்திருக்கிறது என பாருங்கள் என விஜய் ரசிகர்கள், செளந்தரராஜாவின் பதிவுக்கு கீழ் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
மேலும், "நீங்க எதையோ பேசி தளபதிய நல்ல வசியம் பன்னி வெச்சிருக்கீங்க அதனால தான் தளபதி மத்தவங்கள விட உங்கள ஆடியோ லாஞ்ச் அப்புறம் தனிப்பட்ட முறையில கிப்ட் கலக்குறிங்க ப்ரோ" என ஒரு ரசிகரும் கமெண்ட் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











