காவாலாவுக்கு சரியான போட்டி.. கரு கரு கருப்பாயி பாட்டுக்கு டான்ஸ்.. லியோவால் வைப் செய்யும் ரசிகைகள்!

சென்னை: லியோ படத்தில் மிஷ்கின், சாண்டியுடன் விஜய் சண்டை போடும் காட்சிக்கு முன்னதாக படத்தில் இடம்பெறும் ரெட்ரோ பாடலான "கரு கரு கருப்பாயி" பாடலுக்கு தற்போது பல இளம் பெண்களும் வைப் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற தமன்னாவின் காவாலா பாட்டுக்கு ஏகப்பட்ட நடிகைகளும் இன்ஸ்டாகிராம் அழகிகளும் ரீல்ஸ் போட்டு பாடலை டிரெண்டாக்கினர்.

Vijay girl fans started vibing for Karu Karu Karupayi song

இந்நிலையில், லியோவில் இடம்பெற்றுள்ள ரெட்ரோ பாடல் தான் தற்போது புதிய சோஷியல் மீடியா ரீல் மெட்டீரியலாக மாறியுள்ளது.

கரு கரு கருப்பாயி: பிரபுதேவா, ரோஜா நடிப்பில் வெளியான ஏழையின் சிரிப்பில் படத்தில் இடம்பெற்ற "கரு கரு கருப்பாயி" பாடலுக்கு திடீர் டிமாண்ட் ஏற்பட காரணமே விஜய்யின் லியோ படத்தில் அந்த பாடலுக்கு நடிகர் விஜய் நடனமாடுவது தான். அந்த பாடலில் பிரபுதேவா தாறுமாறாக டான்ஸ் ஆட ரோஜா ஒட்டுமொத்த கவர்ச்சியையும் காட்டி நடனமாடி இருப்பார்.

காவாலாவுக்கு போட்டி: ஜெயிலர் படத்தின் காவாலாவுக்கு போட்டியாக லியோ படத்தில் ஒரு பாடல் கூட இல்லையே என ட்ரோல் செய்யப்பட்ட நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள இந்த பாடலே அதற்கு போட்டியாக தற்போது மாறி உள்ளது. இன்ஸ்டாகிராமில் பல இளம் பெண்களும் நடனமாடி ரீல்ஸ் போட தொடங்கி உள்ளனர்.

கருப்பு டிரெஸ்ஸில் கலக்கல் டான்ஸ்: "கரு கரு கருப்பாயி" பாடலுக்கு கருப்பு நிற உடை அணிந்து கொண்டு ரெஸ்டரன்ட் ஒன்றில் 3 பெண்கள் கலக்கலாக கவர்ச்சி நடனம் போட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது. இளம் பெண்கள் தற்போது இந்த பாடலுக்கு நடனம் ஆடத் தொடங்கி உள்ள நிலையில், ஏகப்பட்ட ரீல் வீடியோக்களும் சோஷியல் மீடியாவில் குவியப் போவது உறுதியாகி உள்ளது.

ரெட்ரோ பாடல்கள்: இந்த பாடல் மட்டுமின்றி லியோ படத்தில் மேலும், இரு ரெட்ரோ பாடல்களை லோகேஷ் கனகராஜ் வைத்திருக்கிறார். "தாமரை பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்லை" மற்றும் "நான் பொல்லாதவன்" என 3 பாடல்கள் லியோவில் இடம்பெற்று இருந்தாலும், இமிடியேட் வைபாக "கரு கரு கருப்பாயி" பாடல் மாற காரணமே நடிகர் விஜய் அந்த பாடலுக்கு நடனம் ஆடியிருப்பது தான் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X