நல்லதை கெட்டதா காட்டுறவங்களை நம்பாதீங்க.. சோஷியல் மீடியாவில் தீயாய் பரவிய வதந்தி.. விஜய் பதிலடி!
சென்னை: தளபதி விஜய் கல்வி விருது விழா 2024ல் பங்கேற்ற நடிகர் விஜய் மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றியுள்ளார். கோட் படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் விஜய் அடுத்ததாக தளபதி 69 படத்துடன் சினிமாவில் இருந்து முழுவதுமாக விலகி மக்களுக்கான சேவையை அரசியல் கட்சி தொடங்கி நடத்த திட்டமிட்டுள்ளார்.
2026ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் முதல் முறை வாக்காளர்களை கவரும் விதமாக 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்குகிறார் விஜய் என்கிற விமர்சனங்கள் எழுந்து வந்தாலும், மற்ற யாருமே செய்யாத சிறப்பான விஷயத்தை தளபதி விஜய் செய்து வருகிறாரே என பலரும் பாராட்டி வருகின்றனர்.

கடந்த ஆண்டு நடைபெற்றதை போலவே இந்த ஆண்டும் மாணவர்களை சந்தித்து அவர்களுடன் ஜாலியாக பேசி, விளையாடி பரிசுகளை வழங்கி, அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார் விஜய்.
விஜய் பற்றிய வதந்தி: நடிகை திரிஷாவுடன் விஜய் வெளிநாடுகளில் சுற்றி வருவதாகவும், விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 23ம் தேதி திரிஷா வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட போட்டோவை தொடர்ந்து விஜய்யின் அலுவலகத்திலேயே திரிஷா வீடு வாங்கியிருப்பதாக வலைப்பேச்சு பிஸ்மி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், TVK என்றாலே திரிஷா, விஜய், கீர்த்தி சுரேஷ் கட்சி என்றெல்லாம் கிண்டல் செய்ய ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில், அதற்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக நடிகர் விஜய் பேசியுள்ளதாக அவரது ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் போஸ்ட்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.
நல்லதை கெட்டதாக: சோஷியல் மீடியாக்கள் மற்றும் சில மீடியாக்கள் நல்லதை கெட்டதாகவும் கெட்டதை நல்லதாகவும், நல்லவங்கள கெட்டவங்களாகவும் கெட்டவங்களை நல்லவங்களாகவும் புரொஜெக்ட் பண்றாங்க இல்லையா, அதையெல்லாம் பாருங்க.. எல்லாமே படிங்க.. அதையெல்லாம் கேட்டுட்டு எது சரி? எது தவறு என அனலைஸ் பண்ண மட்டும் கத்துக்கோங்க என விஜய் பேசியுள்ளார்.
பொய்யான பிரச்சாரம்: அதை தெரிந்துக் கொண்டாலே, ஒரு சில கட்சிகள் செய்யும் பொய்யான அரசியல் பிரச்சாரம் எல்லாம் புரிய வரும். நாட்டுல என்ன பிரச்சனை, நாட்டு மக்களுக்கு என்ன பிரச்சனை, எது சரி? எது தவறு? என்பது புரிய வரும் என நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் பேசியுள்ளார். தேவையில்லாத வதந்திகள் தன்னை பற்றியும் தன்னுடன் நடிப்பவர்கள் பற்றியும் பரவி வருவதற்கு மறைமுகமாக நடிகர் விஜய் பதிலடி கொடுத்துள்ளார் என விஜய் ரசிகர்கள் அதை ஷேர் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











