Vijay: மாணவர்களுக்கு வைர மோதிரம் பரிசு.. அதே லுக்கில் மாஸ் காட்டும் தளபதி விஜய்.. ரசிகர்கள் ஹேப்பி!
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்துள்ள நடிகர் விஜய் சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டும் மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழாவை இன்று நடத்தியுள்ளார். கடந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் எடுத்த மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் வழங்கப்பட்ட நிலையில், தற்போது அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் வைர மோதிரத்தை நடிகர் விஜய் பரிசாக வழங்கி உள்ளார்.
கடந்த ஆண்டு எந்த லுக்கில் நடிகர் விஜய் மேடை ஏறி மாணவர்களை சந்தித்து விருதுகளை வழங்கினாரோ கிட்டத்தட்ட அதே லுக்கிற்கு மீண்டும் திரும்பி இருப்பது தளபதி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்த விஜய் அடுத்ததாக தளபதி 69 படத்துக்கான கெட்டப்பிற்கு மாற உள்ள நிலையில், அரசியலில் தவெக தலைவராக இந்த லுக்கில் தான் விஜய் தொடர்வார் என தெரிகிறது.
கல்வி விருது விழா: கடந்த ஆண்டு போல ஒரே மூச்சில் 234 தொகுதியிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்காமல் முதற்கட்டமாக 21 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 800 மாணவர்களுக்கு இன்று நடைபெற உள்ள கல்வி விருது விழாவில் மாணவர்களுக்கு பரிசு வழங்கி வருகிறார் விஜய். மேலும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு மதியம் அருசுவையான சைவ விருந்தை கொடுக்கவும் ஏற்பாடு செய்திருக்கிறார்.

வைர மோதிரம்: 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை பரிசாக வழங்கப்படுகிறது. இதில், அதிக மதிப்பெண்களுடன் முதலிடத்தை பிடித்த மாணவ மாணவிகளுக்கு வைர மோதிரங்களை பரிசாக நடிகர் விஜய் வழங்கி மேடையில் அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டார்.

விஜய் பேச்சு: பள்ளி மாணவர்கள் போதைக்கு அடிமையாக கூடாது என்றும், சின்ன சின்ன சந்தோஷத்துக்காக கெட்டப் பழக்கத்திற்கு ஆளாகக் கூடாது என்பதையும் வலியுறுத்தி பேசியுள்ளார். மேலும், மாணவர்களும் அதை திரும்பச் சொல்ல வேண்டும் என வலியுறுத்தி பேச அரங்கமே அதிர்ந்தது. நடிகர் விஜய்யிடம் விருது வாங்கிய அனைத்து மாணவர்களும் சந்தோஷத்துடன் அவருடன் கை குலுக்கியும் நன்றி சொல்லியும் மகிழ்ந்தனர். நிகழ்ச்சியில் செல்போன்கள் மற்றும் பேனாக்கள் தடை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











