விஜய் இதுவரை எந்தப் படத்துக்கும் எடுக்காத ரிஸ்க்... லியோவுக்காக 30 விதமான ஹேர்ஸ்டைல்... ஆனால்!

சென்னை: விஜய் நடித்து வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் வேகமாக நடைபெற்று வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

லியோ படப்பிடிப்பில் கலந்துகொண்ட பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தை விஜய், லோகேஷ் உள்ளிட்ட லியோ படக்குழுவினர் வரவேற்றனர்.

அப்போது விஜய்யின் வித்தியாசமான சால்ட் அண்ட் பெப்பர் ஹேர்ஸ்டைல் ரசிகர்களிடம் கவனம் பெற்ற நிலையில், தற்போது அதன் பின்னணி குறித்து தகவல் கிடைத்துள்ளது.

வேகமெடுக்கும் லியோ ஷூட்டிங்

வேகமெடுக்கும் லியோ ஷூட்டிங்

வாரிசு படத்தைத் தொடர்ந்து விஜய் தற்போது லியோ ஷூட்டிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். மாஸ்டர் படத்திற்கு பின்னர் விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால், லியோவுக்கு எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் ஷூட்டிங் சென்னையைத் தொடர்ந்து தற்போது காஷ்மீரில் வேகமாக நடைபெற்று வருகிறது. இதில், விஜய், த்ரிஷா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

விஜய்யின் ஹேர்ஸ்டைல்

விஜய்யின் ஹேர்ஸ்டைல்

சில தினங்களுக்கு முன்னர் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் லியோ படப்பிடிப்புக்காக காஷ்மீர் சென்றார். அவரை விஜய், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட லியோ படக்குழுவினர் வரவேற்றனர். அப்போது விஜய்யின் ஹேர்ஸ்டைல் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் ஈர்த்தது. சால்ட் அன்ட் பெப்பர் ஹேர்ஸ்டைலில் வித்தியாசமான லுக்கில் மாஸ் காட்டினார் தளபதி விஜய்.

30 விதமான லுக்கில் விஜய்

30 விதமான லுக்கில் விஜய்

விஜய் பெரும்பாலும் ஹேர்ஸ்டைல் உட்பட தோற்றங்களில் வித்தியாசம் காட்டமாட்டார். முக்கியமாக விஜய்யின் ஹேர்ஸ்டைலில் பெரிதாக மாற்றங்கள் இருக்கவே இருக்காது. ஆனால், லியோ படத்திற்காக லோகேஷ் கேட்டுக்கொண்டதால் தனது ஹேர்ஸ்டைலை மாற்றியுள்ளாராம் விஜய். அதுவும் மொத்தம் 30 விதமான ஹேர்ஸ்டைல்கள் விஜய்க்கு செய்யப்பட்டு அதில் இறுதியாக ஒன்று தேர்வு செய்யப்பட்டுள்ளதாம்.

எல்லாம் லோகேஷுக்காக

எல்லாம் லோகேஷுக்காக

லோகேஷுக்காக மட்டுமே விஜய் இந்த ஹேர்ஸ்டைலுக்கு ஓக்கே சொன்னதாக சொல்லப்படுகிறது. 7 ஸ்க்ரீன்ஸ் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் லியோ, லோகேஷின் சினிமாட்டிக் கான்செப்ட்டில் உருவாகிறதா என இதுவரை அப்டேட் எதுவும் வெளியாகவில்லை. காஷ்மீரில் நடைபெற்று வரும் லியோ ஷூட்டிங்கில், த்ரிஷா, மிஷ்கின், கெளதம் மேனன், ப்ரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X