ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பாடல்.. கோபப்பட்ட விஜய்.. தயாரிப்பாளர் சொன்ன ஷாக் சீக்ரெட்

சென்னை: உலக அளவில் ஃபேமஸான இசையமைப்பாளர்களில் ஒருவர். ஏகப்பட்ட விருதுகளை வாங்கியிருக்கும் அவர் தமிழில் கடைசியாக தக் லைஃப் படத்துக்கு இசையமைத்திருந்தார். படம் தோல்வியடைந்தாலும் படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருந்தன. இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி தயாரிப்பாளர் ஸ்வர்கஜித்ரா அப்பச்சன் கூறியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் என்றாலே அறிமுகம் தேவையில்லை. உலக அளவில் வெகு பிரபலமான அவர் பல விருதுகளை வென்றிருக்கிறார். கடைசியாக தமிழில் அவர் தக் லைஃப் படத்துக்கு இசையமைத்திருந்தார். அதேபோல் ஹிந்தியில் உருவாகிவரும் ராமாயணா படத்துக்கு பேட்மேன் படத்துக்கு இசையமைத்த ஜான்ஸ் ஜிம்மருடன் சேர்ந்து இசையமைக்கவும் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஹ்மான் என்றாலே ஸ்பெஷல்தான்: ஏ.ஆர்.ரஹ்மான் என்றாலே ஸ்பெஷல்தான். அவர் இசையமைத்து ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்று அனைத்து நடிகர்களுமே நினைப்பார்கள். பல ஹீரோக்களுக்கு அவரது பாடல்கள் பெரிய இடத்தை நோக்கி நகர்வதற்கு காரணமாக அமைந்திருக்கின்றன. விஜய்க்கும் அவர் உதயா, அழகிய தமிழ் மகன், மெர்சல், சர்கார் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தார்.

தயாரிப்பாளர் பேட்டி: அந்தப் படங்களில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே ஹிட்டடித்தன. இந்நிலையில் அழகிய தமிழ் மகன் படத்தின் தயாரிப்பாளர் ஸ்வர்கஜித்ரா அப்பச்சன் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது. அவர் அளித்த பேட்டி ஒன்றில், "அழகிய தமிழ் மகன் படத்துக்கு இசையமைத்தபோது இயக்குநர் பரதனிடமோ, விஜய்யிடமோ ஏ.ஆர்.ரஹ்மான் நேரடியாக பேசவில்லை. என்னிடம் மட்டுமே பேசி அந்தப் படத்துக்கு இசையமைத்தார்.

Vijay got angry after listening to a song composed by A R Rahman
Photo Credit:

விஜய்யின் முகம் வாடிவிட்டது: படத்தின் ஓபனிங் பாடல் ரெடியானதும் விஜய் வீட்டுக்கு சென்று அந்தப் பாடலை போட்டு காட்டினேன். அந்தப் பாடல் ஸ்லோவான பாடல். அது விஜய்க்கு பிடிக்கவில்லை. அவரது முகமே வாடிவிட்டது. மேலும் டாப்பாங்குத்து ஸ்டைலில்தான் பாடல் வேண்டும் என்று விஜய் கூறினார். அதற்கு நானோ சரி வேறு ஒரு பாடலை போட சொல்கிறேன் என சொன்னேன். ஆனால் ரஹ்மான் இன்னொரு பாடலை போட்டு கொடுப்பார் என்று விஜய்க்கு நம்பிக்கை இல்லை.

கோபப்பட்ட விஜய்: நான் ரஹ்மானிடம் பேசி பார்க்கிறேன் என்று கூறினேன். ஒரு காஃபிகூட கொடுக்காமல் விஜய் கோபமாக கிளம்பி சென்றுவிட்டார். நான் நேராக ரஹ்மானின் ஸ்டூடியோவுக்கு சென்று ஹீரோவுக்கு பாடல் பிடிக்கவில்லை என கூறினேன். அதற்கு ரஹ்மானோ அவருக்கு மட்டும் பிடிக்கவில்லையா உங்களுக்கும் பிடிக்கவில்லையா என கேட்டார். உடனே நான் எனக்கு டப்பாங்குத்து ஜானரில் பாடல் வேண்டும் என்று கூறினேன்.

கடுப்பான ரஹ்மான்: அதை கேட்டு டென்ஷனாகிவிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான். உடனே அவர் வாலிக்கு ஃபோன் செய்து, நடந்த விஷயத்தை சொல்லி; நீங்கள் ஒரு பாடல் எழுதுங்கள் நான் அதற்கு இசையமைக்கிறேன் என கூறினார். அந்த சமயத்தில் ஒரு பாடல் எழுத ஒரு லட்சம் ரூபாய் வாங்கிக்கொண்டிருந்தார் வாலி. நான் அவரை நேரில் சென்று சந்தித்து ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தேன். அவர் எல்லா புகழும் பாடலை எழுதி கொடுத்தார். அந்தப் பாடலை கேட்டு விஜய்யின் கண்கள் கலங்கிவிட்டன" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X