அதை நடக்க விடமாட்டாங்கன்னு தெரியும்.. கல்வி விருது விழாவில் கோபத்துடன் பேசிய விஜய்.. என்ன சொன்னார்?
சென்னை: கல்வி விருது 2.0வாக இன்று விடுபட்ட 17 மாவட்டங்களில் முதல் 3 இடங்களை பிடித்த 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடிகர் விஜய் விருது வழங்குகிறார். கடந்த வாரம் முதல் கட்டமாக 21 மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அப்போதே மாணவர்கள் மத்தியில் பல விஷயங்களை பேசிய நடிகர் விஜய் போதை பொருள் விஷயத்தை ஹைலைட் செய்து பேசியிருந்தார்.
ஆனால், நீட் குறித்து நடிகர் விஜய்க்கு பேச தைரியம் கிடையாது என்றும் அதனால் தான் அவர் அதுகுறித்து மாணவர்கள் மத்தியில் பேசாமல் கடந்து சென்றார் என விமர்சனங்கள் குவிந்த நிலையில், இன்றைய நிகழ்ச்சியில் முன்னதாக பேச மாட்டேன் என்கிற முடிவில் இருந்து விஜய் அதிரடியாக மைக்கைப் பிடித்து ஆவேசமாக பேசியுள்ளார்.

நடிகர் விஜய் புதிதாக அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில், ஆரம்பத்திலேயே அவருக்கு எதிராக ஏகப்பட்ட ட்ரோல்களும் கடும் விமர்சனங்களும் குவிந்து வருகின்றன. இதையெல்லாம் கவனித்து வரும் விஜய் அதன் காரணமாகவே டென்ஷன் ஆகி எதை செய்ய நினைத்தாலும் இவங்க செய்ய விடமாட்டாங்க என்பதை வெளிப்படுத்தவே அப்படி பேசியுள்ளார் என தெரிகிறது.
வதந்திகளும் விமர்சனங்களும்: நடிகர் விஜய்யை டார்கெட் செய்து ஏகப்பட்ட வதந்திகளும், கடுமையான விமர்சனங்களும் ட்ரோல்களும் ஆரம்பத்திலேயே அவரது அரசியலுக்கு முட்டுக்கட்டையை விளைவிக்கும் நோக்கில் அடுக்கப்பட்டு வருகிறது என விஜய் ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். நடிகர் விஜய் இதற்கு எல்லாம் கோபப்படாமல் திறமையாக தன்னுடைய லட்சிய பாதையில் பயணிக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் விரும்புகின்றனர்.
அதை நடக்க விடமாட்டாங்க: நீட் பிரச்சனைக்கான முக்கிய காரணமே மாநில உரிமைகள் பட்டியலில் இருந்து கல்வியை தேசிய உரிமைகள் பட்டியலுக்கு கொண்டு சென்றது தான் என நடிகர் விஜய் பேசியுள்ளார். மேலும், சட்டத் திருத்த வேண்டும் என்றும் ஒன்றிய அரசின் நிலைப்பாடு மாற வேண்டும் என விஜய் பேசியுள்ளார். ஆனால், இது தன்னுடைய கருத்து தான் என்றும் அதை நடக்க விடமாட்டாங்கன்னு தெரியும் என்றும் விஜய் ஆவேசப்பட்டு பேசியுள்ளார்.
வாய்ப்புகள் நிறைய இருக்கு: உலகம் பெரியது. இங்கே வாய்ப்புகள் அதிகம் இருக்கு, ஒரே விஷயத்தில் மாணவர்கள் முடங்கிப் போய் விட வேண்டாம். கல்வியை ஜாலியாக படிங்க, வெற்றி நிச்சயம் என நடிகர் விஜய் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











