ஒருபாடு.. ஒருபாடு சந்தோஷங்கள்.. மலையாளத்தில் பேசிய விஜய்.. சேட்டன், சேச்சிகள் செம ஹேப்பி!

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'தி கோட்' படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கேரளாவில் தற்போது நடைபெற்று வருகிறது. அதற்காக சில தினங்களுக்கு முன்னதாக நடிகர் விஜய் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறங்கிய போதே ஏகப்பட்ட மலையாள ரசிகர்கள் நடிகர் விஜயின் கார் சேதமடையும் அளவுக்கு வெளிப்படுத்தி அன்பை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மஞ்சுமல் பாய்ஸ் படத்தை கேரள ரசிகர்களுக்கு இணையாக தமிழ் சினிமா ரசிகர்களும் போட்டி போட்டு தியேட்டர்களில் பார்த்து வந்ததைப்போல தற்போது நடிகர் விஜய்க்கான தினமும் ஒரு பெரிய கூட்டம் அவர் தங்கியுள்ள ஓட்டல் மற்றும் படப்பிடிப்பு நடக்கும் உங்களுக்கு இடங்களில் குவிந்து வருகின்றனர்.

Vijay grabs Kerala fans hearts with his latest speech in Malayalam

ஆளப்போறான் தமிழன்: 'கோட்' மற்றும் 'தளபதி 69' படங்களை முடித்துவிட்டு நடிகர் விஜய் முழுநேர அரசியல்வாதியாக மாறப் போவதாக அறிவித்துள்ளார். தொடர்ந்து தனது ரசிகர்களை படப்பிடிப்பு தளங்களில் சூட்டிங் முடிந்த பிறகு சந்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முழுவீச்சில் தயாராகி வருகிறார். இந்நிலையில், ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் ஆதரவுகளை அலேக்காக அள்ளி வருகிறார்.

கோட் படம்: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, திரிஷா, ஜெயராம், மோகன், பிரேம்ஜி அமரன், அஜ்மல் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். டைம் டிராவல் படமா? அல்லது மணி ஹெய்ஸ்ட் படமா? என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர். நடிகர் விஜய் அப்பா, மகன் என இதுவரை நடிக்காத அளவுக்கு நடித்து வருகிறார்.

மலையாளத்தில் பேசிய விஜய்: நடிகர் விஜய் சற்றுமுன் கேரளாவில் ரசிகர்களை சந்தித்தார். அதன் பின்னர் ரசிகர்களுடன் பேச நினைத்த அவர் மைக்கை எடுத்துக் கொண்டு பஸ் மீது ஏறி நின்று தன்னை சுற்றி இருந்த கேரள ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசியது இணையத்தில் தீயாக பரவி வருகிறது. கொஞ்ச நேரத்தில் இதுக்கு மேல மலையாளத்தில் முடியாது என தமிழிலேயே பேச ஆரம்பித்து விட்டார் விஜய்.

ஓணம் கொண்டாடியது போல: கேரள ரசிகர்கள் ஓணம் பண்டிகை அன்று தான் அளவில்லா மகிழ்ச்சியில் இருப்பீர்கள் என்று தெரியும். எனக்கு இப்போ இங்கே ஓணம் பண்டிகை நடப்பது போல இருக்கிறது. உங்களை எல்லாம் பார்த்தால், எனக்குள்ள ஓணம் செலிபிரேஷன் ஃபீலிங் வருது என நடிகர் விஜய் பேசியது மலையாள ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

கோடான கோடி நன்றிகள்: மேலும், நடிகர் விஜய் இத்தனை பேர் இந்த ஊர்ல என் மேல அன்பு செலுத்துறீங்க, உங்களுக்கு எல்லாம் என்ன சொல்றதுன்னே தெரியல என சொல்லி விட்டு கோடான கோடி நன்றிகள் என விஜய் சொன்னதை கேட்ட ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதிக்க ஆரம்பித்து விட்டனர். கேரளாவில் விஜய் இருக்கும் வரை தினம்தோறும் அங்கே ஓணம் செலிபிரேஷன் போலத்தான் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். தமிழ்நாட்டிலும் விரைவில் ஓட்டுக் கேட்க நடிகர் விஜய் ஒவ்வொரு ஊரிலும் இப்படி சென்று பேசினால் கூட்டம் அலைமோதுமே என தளபதி ரசிகர்கள் இந்த வீடியோக்களை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X