Vijay: புதுமண தம்பதிகளை வாழ்த்திய விஜய்.. பிரசாரத்தில் நடந்த ருசீகரம்..
திருவள்ளூர்: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான நடிகர் விஜய் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஏப்ரல் 20ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் பிரசாரம் செய்து வருகிறார். இப்படி இருக்கையில் திருவள்ளூரில் புதுமண தம்பதிகளை தனது பிரசார வாகனத்திற்கு வரவழைத்து வாழ்த்து தெரிவித்து அனுப்பினார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் 2026 சட்டமன்ற தேர்தலில் 233 தொகுதிகளில் விசில் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். இப்படி இருக்கையில் எடப்பாடி தொகுதியில் மட்டும் தவெக வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. இப்படி இருக்கையில் அந்த தொகுதியில் மட்டும் தொலைக்காட்சி பெட்டியில் போட்டியும் சுயேட்சை வேட்பாளருக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
நாளையுடன் பிரசாரம் முடிவதால் கடந்த சில நாட்களாக விஜய் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறார். மேலும் இன்று விஜய்யின் மனைவி சங்கீதா தொடுத்திருந்த விவாகரத்து மனு முதல் முறையாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதால், விசாரணைக்காக விஜய் செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்திற்குச் சென்றார். அங்கு விசாரணை முடிந்த பின்னர் தான் பிரசாரத்திற்கு வந்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதற்காக தனது தொகுதியில் இரண்டாவது முறையாக பிரசாரம் செய்ய திருச்சிக்கு மீண்டும் சென்றார் விஜய். தமிழக வெற்றிக் கழகம் எதிர் கொள்ளும் முதல் தேர்தல், அதுவும் பொதுத் தேர்தல் என்பதால் தேர்தலில் விஜய் எத்தனை தொகுதிகளுக்குச் சென்று பிரசாரம் செய்வார் என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. ஆனால் அவர் அனைத்து மாவட்டங்களுக்குமே கூட செல்லவில்லை. கடலூருக்கு பிரசாரம் செய்யச் செல்வதாக கூறிவிட்டு, அனுமதியும் வாங்கிவிட்டு, மூன்று முறை ரத்து செய்தார்.
இதனால் விஜய் தனது வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய செல்லவில்லை. சென்னையில் இருக்கும் 16 தொகுதிகளுக்குமே கூட செல்லவில்லை. மாலை 6 மணிக்கு மேல் பிரசாரம் செய்வது இல்லை என இப்படியாக பல விமர்சனங்கள் இருக்கும் போது, விஜய் தான் போட்டியிடும் இரண்டு தொகுதிகளான பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளிலும் இரண்டு முறை பிரசாரம் செய்துவிட்டார்.


Click it and Unblock the Notifications