Vijay: விஜய் - வெற்றிமாறன் கூட்டணி... நடுவில் வந்த பிரபல இயக்குநர்... தளபதியின் சாய்ஸ் யார்..?
சென்னை: விஜய்யுடன் மீண்டும் இணைவது குறித்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அப்டேட் கொடுத்துள்ளார். முக்கியமாக விஜய் - வெற்றிமாறன் கூட்டணி குறித்தும் ஜிவி பிரகாஷ் மனம் திறந்துள்ளது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் - வெற்றிமாறன் கூட்டணி
விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படம் அடுத்தாண்டு வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதனிடையே விஜய் - வெற்றிமாறன் கூட்டணி குறித்து அடிக்கடி செய்திகள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே விஜய்க்கு வெற்றிமாறன் ஒரு கதை கூறியிருந்தார்.

ஆனால், அப்போது அது சாத்தியம் இல்லாமல் போய்விட்டது. இருப்பினும் விரைவில் விஜய் - வெற்றிமாறன் கூட்டணி கண்டிப்பாக இணையும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இதுகுறித்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அப்டேட் கொடுத்துள்ளார். வெற்றிமாறனின் ஆல்டைம் ஃபேவரைட் இசையமைப்பாளர் என்றால் ஜிவி பிரகாஷ் தான். பொல்லாதவன், ஆடுகளம், அசுரன் என இக்கூட்டணியின் மிரட்டல் விரைவில் மீண்டும் வாடிவாசல் படத்தில் இணையவுள்ளது.
சூர்யா, வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் வாடிவாசல் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஜிவி பிரகாஷ் தனது சமீபத்திய பேட்டியில் விஜய் - வெற்றிமாறன் கூட்டணி குறித்து பேசியுள்ளார். அதாவது விஜய் சாருடன் அடிக்கடி பேசிக் கொண்டுதான் இருக்கேன். நான் தேசிய விருது வென்ற போது விஜய் தொடர்புகொண்டு வாழ்த்தியதாக ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார்.
மீண்டும் விஜய்யுடன் இணைவது எப்போது என்ற கேள்விக்கு, அது விரைவில் நடக்கும் என ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். முக்கியமாக அந்தப் படத்தை வெற்றிமாறன் அல்லது சுதா கொங்கரா இயக்கலாம் எனவும் ஜிவி பிரகாஷ் அப்டேட் கொடுத்துள்ளார். இதனால், விஜய் - வெற்றிமாறன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை இன்னும் நடந்துகொண்டிருப்பதாகவே தெரிகிறது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் சுதா கொங்கராவும் விஜய்யுடன் கூட்டணி வைக்க முயற்சி செய்துகொண்டிருப்பது சர்ப்ரைஸ் அப்டேட்டாக அமைந்துள்ளது. முக்கியமாக வெற்றிமாறன், சுதா கொங்காரா இருவரது இயக்கத்திலும் நடிக்க விஜய் அதிக ஆர்வத்துடன் இருப்பதாக ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார். ஆனால், ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பது விஜய் - வெற்றிமாறன் கூட்டணியை தான் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











