என்னை விட சிறந்த நடிகர் தனுஷ்தான் - விஜய்யின் பாராட்டு

விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் நடிகர் விஜய்க்கு சிறந்த நடிகருக்கான பிரிவுகளில் இரு விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த விருதுகளைப் பெற்றுக் கொண்ட விஜய், மேடையில் பேசுகையில், "எனக்கு இரு விருதுகள் கிடைத்துள்ளன. ஆனால் என்னைவிட சிறந்த நடிகர் ஒருவர் இங்கு உட்கார்ந்திருக்கிறார்... அவர் தனுஷ். உண்மையிலேயே மிகச் சிறந்த நடிகர்," என்று பாராட்டினார்.
விஜய்யின் பாராட்டுக்கு நன்றி தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார் தனுஷ்.
அதில், "விஜய் சாரின் உயர்ந்த வார்த்தைகளுக்கு என் தனிப்பட்ட வணக்கம். ஆனால் என்றைக்கும் அவர் தான் சிறந்த, பெரிய நடிகர். எனக்கு இந்தமுறை இரண்டு விருதுகள் கிடைத்திருக்கின்றன. ஒன்று 'விஜய் விருதுகள்', மற்றொன்று 'விஜய்' சாரின் பாராட்டு எனும் விருது" என்று குறிப்பிட்டுள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications