சிவகார்த்திகேயனை திடீரென பாராட்டிய விஜய்....அட இதற்காகத்தானா?

சென்னை : நடிகர் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகும் பீஸ்ட் படத்தில் அரபிக்குத்து பாடல் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனை நடிகர் விஜய் திடீரென பாராட்டியுள்ளார்.

இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் ஜரூராக நடைபெற்று வருகிறது.

படத்தின் முதல் சிங்கிள் அரபிக்குத்து கடந்த மாதத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

பீஸ்ட் படம்

பீஸ்ட் படம்

நடிகர் விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் பீஸ்ட். இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த ஆண்டிலேயே நிறைவடைந்த நிலையில் வரும் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு மற்றும் கோடைக் கொண்டாட்டமாக படம் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோடைக் கொண்டாட்டம்

கோடைக் கொண்டாட்டம்

தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் டப்பிங் பணிகளும் நிறைவடைந்துள்ளன. தற்போதே படத்தின் ப்ரமோஷன் பணிகளை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் முடுக்கி விட்டுள்ளது. படத்தின் சிங்கள் கடந்த மாதம் காதலர் தினத்தையொட்டி வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

பீஸ்ட் பட பிரமோஷன்

பீஸ்ட் பட பிரமோஷன்

தற்போது சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் பிரமோஷன் பணிகளில் சன் பிக்சர்ஸ் முழுமையாக ஈடுபட்டுள்ளது. வரும் 10ம் தேதி படம் ரிலீசாக உள்ள நிலையில் இதையடுத்து பீஸ்ட் படத்தின் பிரமோஷனில் சன் பிக்சர்ஸ் முழுமையாக ஈடுபடும் என்று எதிர்பார்க்கலாம்.

அரபிக்குத்து பாடல்

அரபிக்குத்து பாடல்

அனிருத் இசையில் படத்தின் முதல் பாடல் அரபிக்குத்து கடந்த மாதம் 14ம் தேதி வெளியான நிலையில், பாடலின் வரிகளை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். இந்தப் பாடல் தற்போது 150 மில்லியனை நோக்கி சென்று வருகிறது. முன்னதாக படத்தின் ப்ரமோவும் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

சிவகார்த்திகேயனுக்கு விஜய் பாராட்டு

சிவகார்த்திகேயனுக்கு விஜய் பாராட்டு

இந்நிலையில் பாடலை கேட்டவுடன், மிகவும் சிறப்பாக அமைந்துள்ளதாக நடிகர் விஜய் அனிருத்தை பாராட்டியுள்ளார். மேலும் சிவகார்த்திகேயனிடம் பாடல் எழுதி கொடுத்ததற்கு நன்றி நண்பா, நன்றாக இருக்கிறது. பாடல் செம ஹிட்டடிக்கும் என்று கூறியுள்ளாராம். இதுகுறித்து சிவகார்த்திகேயன் தற்போது விழா மேடை ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X