சம்யுக்தாவை பார்த்து அழகாக இருப்பதாக சொன்ன விஜய்.. வெட்கப்பட்ட நடிகை!

சென்னை : விஜய்யின் வாரிசு படம் பொங்கலையொட்டி வெளியாகவுள்ளது. இதற்காக டீம் தற்போது தயாராகி வருகிறது.

படத்தின் சூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஒரு பாடல் சூட் மற்றும் சில பேட்ச் வொர்க்குகள் மட்டுமே பாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளியையொட்டி படத்தின் முதல் பாடல் வெளியாகவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய்யின் வாரிசு படம்

விஜய்யின் வாரிசு படம்

நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா, சம்யுக்தா, பிரபு, சரத்குமார், ஷாம் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது வாரிசு படம். இந்தப் படம் விஜய்யின் 66வது படமாக வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் வழக்கமான விஜய் படங்களை போல இல்லாமல் குடும்ப சென்டிமெண்ட் தூக்கலாக இருக்கும் என்று முன்னதாக படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்துள்ளார்.

ஜாலியான கேரக்டரில் விஜய்

ஜாலியான கேரக்டரில் விஜய்


இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஜாலியான விஜய்யை இந்தப் படத்தில் பார்க்க முடியும் என்று இந்த போஸ்டர்களை பார்த்த போது தெரிய வருகிறது. இந்தப் படத்தில் ராஷ்மிகா லேடி லீட் கேரக்டரில் நடித்துள்ளார்.

திருஷ்டி கழித்த ராஷ்மிகா

திருஷ்டி கழித்த ராஷ்மிகா

அவர் தான் சிறு வயதிலிருந்தே விஜய்யின் தீவிர ரசிகை என்றும் அவருடன் இணைந்து நடிப்பது தனது வாழ்நாள் கனவு என்றும் பூஜையின்போதே தெரிவித்திருந்தார். விஜய்யை அவர் திருஷ்டி கழிக்கும் வகையில் வெளியான புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள இந்தப் படம் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.

தீபாவளிக்கு பர்ஸ்ட் சிங்கிள்

தீபாவளிக்கு பர்ஸ்ட் சிங்கிள்

இந்தப் படம் பொங்கலையொட்டி வெளியாகவுள்ள நிலையில், தீபாவளிக்கு படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் விஜய் பாடியுள்ள ஒரு பாடலும் இடம்பெற்றுள்ள நிலையில், அந்தப் பாடலின் சூட்டிங் தற்போது நடைபெற்று வருவதால் சித் ஸ்ரீராம் வாய்சில் உருவாகியுள்ள பாடல்தான் தீபாவளியையொட்டி வெளியாகவுள்ளதாக படக்குழு தகவல் தெரிவித்துள்ளது.

விஜய் டிவி நிகழ்ச்சியில் சம்யுக்தா

விஜய் டிவி நிகழ்ச்சியில் சம்யுக்தா

இதனிடையே இந்தப் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ள சம்யுக்தா, தற்போது விஜய் டிவியின் ஊ சொல்றியா ஊஊ சொல்றியா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். அவரிடம் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மாகாபா பல்வேறு கேள்விகளை அடுக்கினார். அப்போது விஜய் குறித்த கேள்வியும் கேட்கப்பட்டது.

சம்யுக்தா அழகை பாராட்டிய விஜய்

சம்யுக்தா அழகை பாராட்டிய விஜய்

இதையடுத்து பேசிய சம்யுக்தா, விஜய் தன்னைப் பார்த்து மேம் நீங்க ரொம்ப அழகாக இருக்கீங்க என்று கூறியதாக வெட்கத்துடன் பகிர்ந்துக் கொண்டார். படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளதாகவும் விஜய்யின் ஈடுபாடு குறித்து தான் மிகவும் வியப்படைந்ததாகவும் கூறியுள்ளார்.

விஜய் நடனத்தை லைவ்வாக பார்த்தேன்

விஜய் நடனத்தை லைவ்வாக பார்த்தேன்

தொடர்ந்து பேசிய சம்யுக்தா, தினந்தோறும் சூட்டிங்கிற்கு விஜய் 7 மணிக்கெல்லாம் வந்து விடுவார் என்றும் தெரிவித்துள்ளார். விஜய்யின் டான்சை லைவ்வாக பார்த்ததாகவும் அது வேற லெவல் எக்ஸ்பீரியன்ஸ் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். அவர் ஒரு ஸ்டெப்பை முடித்தால் செட் முழுவதும் இணைந்து கைத்தட்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X