விஜய், ஹ்ரித்திக், அல்லு அர்ஜுன் -யார் உங்கள் biopic-ல் நடிக்கலாம்? பிரபுதேவாவின் நச் பதில் பாருங்க!

சென்னை: நடன இயக்குநர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகங்களைக் கொண்டவர் பிரபுதேவா அவர்கள். நாளை அவர் நடித்துள்ள மை டியர் பூதம் திரைப்படம் ரிலீஸ் ஆகிறது.

மேலும் யங் மங் சங், பகீரா, ஊமை விழிகள், முசாசி, ஃப்ளாஷ் பேக், மை டியர் பூதம், பொய்க்கால் குதிரை, ரேக்ளா ஆகிய தமிழ்ப் படங்களிலும், லக்கி மேன் என்கிற கன்னடப் படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

நடிப்புக்கு கமல் ஹாசன், ஸ்டைலுக்கு ரஜினி, இசைக்கு இளையராஜா போல நடனத்திற்கு பெயர் போன பிரபு தேவா அவர்கள் சமீபத்தில் நடந்த கலந்துரையாடலில் பல்வேறு சுவாரஸ்யமான கேள்வ்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

 Inspiring Goal

Inspiring Goal

அப்பா சுந்தரம் தமிழில் நல்ல நடன இயக்குநராக பணியாற்றுகிறார். அந்தச் சமயத்தில் 11-ஆம் வகுப்பில் ஃபெயிலாகியுள்ளார் பிரபுதேவா. அடுத்து என்ன செய்ய போகிறாய் என்று அப்பா திட்டிவிட்டு, உன் வாழ்க்கையை நீதான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினாராம். அப்போது, அப்பா நல்ல நடன இயக்குநராக இருக்கிறார். நாம் தமிழ் சினிமாவில் டாப் கோரியோகிராஃபர் ஆக வேண்டும் என்று நினைக்கவில்லையாம். இந்தியாவிலேயே டாப் கோரியோகிராஃபர் ஆக வேண்டும் என்று நினைத்ததாக கூறியுள்ளார் பிரபுதேவா

 தனக்கு மாற்று

தனக்கு மாற்று

இப்போது முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித் போன்றவர்கள் ஒரு வேளை நடிகர்களாக இல்லாமல் நடன இயக்குநர்களாக இருந்திருந்தால், யார் உங்களுக்கு போட்டியாக இருந்திருப்பார்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, அப்போதும் நான் தான் என்று தன் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தினார். உண்மையும் அதுதானே!

 பிரபுதேவா பயோபிக்

பிரபுதேவா பயோபிக்

அதே போல், உங்கள் வாழ்க்கை வரலாற்றை படமாக்கினால் விஜய், அல்லு அர்ஜுன் அல்லது ஹ்ருத்திக் ரோஷன். இந்த மூவரில் யார் பிரபு தேவாவாக நடிக்க வேண்டும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, மூவரும் இல்லை. அவரவர்களுக்கு தனி ஸ்டைல் உண்டு. எனக்கு தெரியவில்லை என்று பிரபு தேவா கூறியுள்ளார்.

 மறக்க முடியாத பாராட்டு

மறக்க முடியாத பாராட்டு

உங்களுக்கு கிடைத்த சிறந்த பாராட்டு எது என்ற கேள்விக்கு, ஒரு முறை மும்பையில் காரில் நண்பருடன் சிக்னலில் நின்று கொன்டிருந்தபோது, ஒரு கை மற்றும் கால் இல்லாதவர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அவர் தன்னை பார்த்ததும் கையில் இருந்ததை கீழே போட்டுவிட்டு நடனமாடத் தொடங்கினாராம். உடனே அவரது நண்பர்,"மாஸ்டர்... இத விட உங்களுக்கு வேற என்ன பெருமை இருக்கப் போகுது" என்று தன்னிடம் கூறியதாகவும், அந்த ஊனமுற்றவர் கொடுத்த மரியாதைதான் தனக்கு கிடைத்த சிறந்த பாராட்டு என்று பிரபுதேவா நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X