கரூர் சம்பவம்: விஜய்க்கு சிபிஐ மீண்டும் சம்மன்!

சென்னை: கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக தலைவா் விஜய் பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனர். இந்த வழக்கு தொடர்பான
விசாரணைக்கு தவெக தலைவர் விஜய் நாளை ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் விஜய் நடத்திய மக்கள் சந்திப்பில் 41 பேர் உயிரிழந்தனர். இதில், 110 போ் காயமடைந்தனா். இந்த வழக்கு உச்சநீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். முன்னதாக இந்த வழக்கில் சிபிஐ, ஜனவரி 12ம் தேதி தமிழக வெற்றி கழகம் தலைவா் விஜய்யிடம் முதல் சுற்று
விசாரணை டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நடத்தப்பட்டது. அன்றைய தினம் விஜய் ஆறு மணி நேரங்களுக்கும் மேலாக விஜய்யின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

Vijay Karur CBI

நாளை ஆஜராக வேண்டும்: இதையடுத்து, ஜனவரி 19ந் தேதி இரண்டாவது சுற்று விசாரணை சுமார் ஐந்தரை மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதற்கு மேல் விஜய்யிடம் விசாரணை நடத்தப்படாது என கூறப்பட்டு வந்த நிலையில், கரூர் வழக்கில் நாளை மீண்டும் ஆஜராக விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நாளை தவெக வேட்பாளர் நேர்காணல் தொடங்க இருந்த நிலையில், திடீர் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதால் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X