யப்பா செம ஃபாஸ்ட்.. GOAT படத்தின் டப்பிங் ஓவர்?.. வெங்கட் பிரபு புயல் வேகத்தில் இருக்காரே

சென்னை: வெங்கட் பிரபு கோலிவுட்டில் இப்போது முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். கடைசியாக அவர் இயக்கத்தில் வெளியான கஸ்டடி திரைப்படம் படுதோல்வியடைந்தது. அதற்கு முன்னதாகவே விஜய்யிடம் கதை சொல்லி ஓகே வாங்கியிருந்த அவர் தற்போது GOAT படத்தை இயக்கிவருகிறார். பெரும் எதிர்பார்ப்போடு இந்தப் உருவாகிவருகிறது. செப்டம்பர் மாதம் படம் ரிலீஸாகவிருக்கும் சூழலில் இப்போது படத்தின் பணிகள் முடியும் தருவாயில் இருக்கின்றன.

கங்கை அமரனின் மூத்த மகன் வெங்கட் பிரபு. சில படங்களில் நடித்த அவர் சென்னை 600028 படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். நட்பு, கிரிக்கெட் ஆகியவைகளை மையமாக வைத்து படு ஜாலியாக அந்தப் படத்தை உருவாக்கியிருந்தார் அவர். படமும் மெகா ஹிட்டானது. முக்கியமாக முதல் பட இயக்குநர் போன்றே அவர் பணியாற்றவில்லை. அனுபவம் மிக்க இயக்குநர் போல் படத்தை உருவாக்கியிருக்கிறார் என்று பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தன.

GOAT Update Vijay Venkat Prabhu


அடுத்தடுத்த ஹிட்: முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவதாக சரோஜா படத்தை இயக்கினார். அந்தப் படமும் சூப்பர் ஹிட்டானது. முக்கியமாக த்ரில்லர் ஜானரிலும் தான் கைதேர்ந்தவர் என்பதை வெங்கட் பிரபு அந்தப் படத்தின் மூலம் நிரூபித்தார். தொடர்ந்து அவர் இயக்கிய கோவா படம் தோல்வியடைந்தது. படம் வணிக ரீதியாக வரவேற்பை பெறாவிட்டாலும் படம் பார்ப்பதற்கு ஜாலியாக இருந்தது என்றும்; ரொம்பவே கேஷுவலாக படத்தை உருவாக்கியிருக்கிறார் என்றும் ரசிகர்கள் ஓபனாகவே கூறினர்.

மெகா ஹிட்: வெங்கட் பிரபுவின் கரியரிலேயே அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் மங்காத்தா. அஜித்தின் 50ஆவது படமாக உருவான அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. படத்தில் அவர் வைத்திருந்த ட்விஸ்ட் அதிரிபுதிரி வரவேற்பை பெற்றது. மங்காத்தா வெற்றிக்கு பிறகு வெங்கட் பிரபு தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் என்ற வரிசையில் இடம்பெற்றுவிட்டார். மேலும் மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகத்துக்கான லீடோடு படத்தை முடித்திருந்தார் அவர்.

GOAT:மங்காத்தா படத்துக்கு பிறகு அவர் இயக்கிய சில படங்கள் சரியாக போகவில்லை. அந்த சறுக்கலை மாநாடு படத்தின் மூலம் சரி செய்துகொண்ட அவர் கடைசியாக கஸ்டடி படத்தை இயக்கினார். தற்போது விஜய், பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்டோரை வைத்து GOAT படத்தை இயக்கிவருகிறார். அஜித்துக்கு எப்படி மெகா ஹிட்டை கொடுத்தாரோ அதேபோல் விஜய்க்கும் இதில் மெகா ஹிட்டை கொடுப்பார் என்று விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

விறுவிறு பணிகள்: படத்தின் ஷூட்டிங் இந்தியா, தாய்லாந்து, ரஷ்யா உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. ரஷ்யாவில் நடந்ததுதான் இறுதிக்கட்ட ஷூட்டிங் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில்; சமீபத்தில் படக்குழு இலங்கைக்கு சென்றதாகவும் அங்குவைத்து மைக் மோகன் சம்பந்தப்பட்ட காட்சிகளை ஷூட் செய்ததாகவும் புதிய தகவல் ஒன்று சிறகடித்தது குறிப்பிடத்தக்கது.

டப்பிங் ஓவர்: இந்நிலையில் கோட் படத்தில் தன்னுடைய போர்ஷனுக்கான டப்பிங்கை விஜய் முடித்திருக்கிறார் என்று இப்போது சொல்லப்படுகிறது. சில நாட்களுக்கு முன்புதான் அந்த டப்பிங்கை விஜய் முடித்ததாகவும்; அதன் பிறகுதான் அவர் வெளிநாடு சென்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் யப்பா வெங்கட் பிரபுவும், விஜய்யும் புயல் வேகத்துல இருக்காங்களே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். இதற்கிடையே விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 22ஆம் தேதி கோட் படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X