Vijay - தங்கை மீது விஜய்க்கு இவ்வளவு பாசமா?.. நெகிழ வைக்கும் சம்பவம்
சென்னை: vijay (விஜய்) தங்கை மீது கொண்ட பாசத்தால் விஜய் செய்திருக்கும் சம்பவம் அவரது ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
தமிழ் சினிமாவில் 80களில் பிரபலமான இயக்குநராக இருந்த எஸ்.ஏ.சந்திரசேகரின் மகன் விஜய். இவருக்கு வித்யா என்ற மகளும் இருந்தார். விஜய் இப்போது இந்தியாவின் டாப் ஹீரோக்களில் ஒருவர் என்பது அனைவரும் அறிந்தது. ஆனால் அவரது தந்தை வித்யா குறித்து பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. சிறிய வயதிலேயே வித்யா உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கை மீது பாசம்: விஜய்க்கு வித்யா மீது எப்போதுமே தனித்த பாசம் உண்டு. அதன் காரணமாக வித்யா உயிரிழந்ததை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. இதன் காரணமாகத்தான் கல கலவென்று இருந்த விஜய் வித்யா உயிரிழப்புக்கு பிறகு ரொம்பவே அமைதியாகிவிட்டார் என்று பலரும் கூறுவதுண்டு. வித்யா மீது அளவுக்கடந்த பாசம் வைத்திருந்தாலும் அதுகுறித்து பொது வெளிகளில் விஜய் வாய் திறந்து பேசியதில்லை.
விஜய்யின் செயல்: விஜய்க்கு அவர் தங்கை மீது இருக்கும் பாசத்தை உணர்ந்துகொண்ட அவரது ரசிகர்களும், மக்கள் இயக்கத்தினரும் வித்யாவின் நினைவாக பல செயல்களைச் செய்துவருகின்றனர்.அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் வித்யாவின் பெயரில் ஒரு பள்ளியை நடத்திவருவதாக கூறப்படுகிறது. அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் நடந்து முடிந்த பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.
களத்தில் இறங்கிய விஜய்: இதனை தெரிந்துகொண்ட நடிகர் விஜய் அந்தப் பள்ளி நிர்வாகிகளை அழைத்து இனி பள்ளிக்கு தேவையான அனைத்தையும் தானே செய்வதாக உறுதியளித்திருக்கிறாராம். மேலும் தொடர்ந்து சிறப்பான முறையில் பள்ளியை முன்னேற்றி சிறந்த மாணவ, மாணவிகளை உருவாக்க வேண்டும் என அவர் கூறியிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. விஜய்யின் இந்த செயல் பலரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

மாணவ, மாணவிகளை சந்திக்கும் விஜய்: முன்னதாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்நாட்டில் இருக்கும் 234 தொகுதிகளிலும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை ஜூன் மாதம் அவர் சந்திக்கவிருப்பதாக ஒரு தகவல் வெளியானது. அதேபோல், சமீபத்தில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் மக்களுக்கு ஒருவேளை மதிய உணவு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் லியோ, தளபதி 68: இப்படி பொதுமக்களுக்கு பயன் தரும் பல நடவடிக்கைகளை விஜய் தனது மக்கள் இயக்கத்தினர் மூலம் தொடர்ந்து செய்துவருகிறார் விஜய். அவர் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார். அதனையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68ஆவது படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது.


Click it and Unblock the Notifications











