Vijay - மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு விஜய் போட்ட ஆர்டர்.. ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருக்காரே

சென்னை: Vijay (விஜய்) நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு ஒரு ஆர்டர் போட்டிருக்கிறார். அதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் விஜய் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருக்காரே என தெரிவித்துவருகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார் விஜய். காஷ்மீர் ஷெட்யூல், சென்னை ஷெட்யூல் என படக்குழு தீவிரமாக பணியாற்றிவருகிறது. சமீபத்தில்தான் ஆதித்யராம் ஸ்டூடியோவில் செட் போடப்பட்டு 2000 டான்ஸர்களுடன் விஜய், அர்ஜுன், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்டோ நடனமாடும் பாடல் காட்சி பிரமாண்டமாக படமாக்கப்பட்டது. படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் இந்த மாதத்துக்குள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷூட்டிங் பிரேக்: பாடல் ஷூட்டிங் முடித்த கையோடு விஜய் இரண்டு நாட்கள் ஷூட்டிங்கிலிருந்து பிரேக் எடுத்தார். முழு வேகத்தோடு லியோ ஷூட்டிங்கிற்கு ஒத்துழைப்பு கொடுத்த விஜய் எதற்காக திடீரென பிரேக் எடுத்தார் என்ற கேள்வி அவரது ரசிகர்களிடம் எழுந்தது. ஆனால் விஜய் ரெஸ்ட் எடுப்பதற்காக பிரேக் எடுக்கவில்லை வேறு ஒரு வேலையை செய்வதற்காகத்தான் பிரேக் எடுத்தார் என்பது பின்னர் தெரியவந்தது.

Vijay has ordered his Makkal Iyakkam administrators not to put up banners

என்ன காரணம்?: அதாவது தமிழ்நாட்டில் இருக்கும் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மூன்று பேரை விஜய் சந்தித்து சான்றிதழ் மற்றும் ஊக்கத் தொகையை வழங்குவதற்கு திட்டம் தீட்டியிருக்கிறார். இது அவரது அரசியல் மூவ்வை உணர்த்துவதாக பலரும் கூறினாலும் மாணவ,மாணவிகளை சந்திப்பது ஆரோக்கியமான விஷயம்தான். இதனை அவர் பல காலமாக செய்துவருகிறார். எனவே இதற்கும் அரசியலுக்கும் முடிச்சு போட வேண்டாம் என ரசிகர்கள் கூறினர்.

ஆலோசனை: இரண்டு நாட்கள் ஷூட்டிங்கிலிருந்து பிரேக் எடுத்த விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஒரு சந்திப்பை நிகழ்த்தினார். அந்த சந்திப்பில் மாணவ, மாணவிகளை சந்திக்கும்போது என்ன மாதிரியான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன என்பது தொடர்பாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.

விஜய் போட்ட ஆர்டர்: இந்நிலையில் இந்த ஆலோசனையில் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு ஒரு ஆர்டர் போட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி மாணவ, மாணவிகளை சந்திக்கும் நிகழ்வின்போது யாரும் ஒரு பேனர்கூட வைக்கக்கூடாது என விஜய் கண்டிப்புடன் சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பேனர் கலாசாரத்தால் பல உயிர்கள் தமிழ்நாட்டில் போன சூழலில் அந்த மாதிரியான அசம்பாவிதம் எதுவும் தன் மக்கள் இயக்கத்தால் நடந்துவிடக்கூடாது என்பதில் விஜய் தெளிவாக இருப்பதை இது உணர்த்துவதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

மாணவர்களுக்கு என்னென்ன?: மாணவ, மாணவிகளுடனான சந்திப்பின்போது அவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை மட்டும் வழங்கப்படாமல் 1000 கோடி ரூபாய் செலவில் நலத்திட்ட உதவிகள், 5000 பேருக்கு காலை உணவு அளிப்பது என்ற முடிவிலும் விஜய் மக்கள் இயக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பானது நாளை விஜய் அலுவலகத்தில் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X