Thalapathy 68 update: தளபதி 68.. உளறி கொட்டும் வெங்கட் பிரபு.. கடுப்பான விஜய்!
சென்னை: தளபதி 68 படம் குறித்து அடுத்தடுத்த அப்டேட்டுகளை வெங்கட்பிரபு வெளியிட்டு வருவதால் தளபதி விஜய் கடுப்பில் இருப்பதாக செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.
600028 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் வெங்கட் பிரபு. இவர் கலகலப்பான படமாக எடுப்பதில் வல்லவரான இவர், அஜித்தை வைத்து மங்காத்தா படத்தை எடுத்து மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளார்.

தற்போது, இவர் தளபதி விஜய் நடிப்பில் தயாராகவிருக்கும் படம்தான் தளபதி68. இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது
தளபதி 68: இந்நிலையில் சினிமா விமர்சகரான செய்யாறு, தளபதி 68 படம் குறித்து பேட்டி அளித்துள்ளார். அதில், தளபதி 68 படத்தில் சினேகாவிற்கு முன் ஜோதிகா, சிம்ரன் ஆகியோரின் பெயர் அடிபட்டது. இந்த படத்தில் விஜய் இந்த படத்தில் அப்பா, மகன் என இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
விஜய்க்கு ஜோடி யார்: மகன் விஜய்க்கு நடிகை பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்கவிருக்கிறார். அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய்க்கு யார் ஜோடியா நடிக்கப்போகிறார்கள் என்பது சோஷில் மீடியாவில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. ஜோதி மற்றும் சிம்ரன் இருவருமே முடியாது என்று சொல்லிவிட்டனர். ஆனால், சினேகா ஏறக்குறைய ஒப்பந்தமாகி விட்டதாக கூறப்படுகிறது.
விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: ஆனால் இதனை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பினை படக்குழு இன்னும் வெளிவிடவில்லை. இயக்குனர் வெங்கட்பிரபு அவ்வப்போது அளித்த பேட்டியின் மூலம் தனது படத்தினை பற்றிய அப்டேட்டுகளை கொடுத்து வருகிறார்.
கடுப்பான விஜய்: இதற்கு எல்லாம் காரணம் வெங்கட்பிரபு தான், அவர் எங்கு சென்றாலும் தொடர்ந்து தளபதி 68 திரைப்படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார். இதனால், விஜய்யே ஒரு கட்டத்தில் கடுப்பாகி, லியோ படம் வெளியாகட்டும் அதன் பிறகு, தளபதி 68 படப்பிடிப்பு தொடங்கியதும், இந்த படத்தின் அப்டேட்டை பற்றி பேசலாம் அதுவரைக்கும் படம் குறித்து எந்த தகவலையும் வெளியிடாதீங்க என்று வெங்கட்பிரபுவிற்கு விஜய் வாய்ப்பூட்டு போட்டுள்ளார் என்று செய்யாறு பாலு தளபதி 68 படம் குறித்து விரிவாக பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











