'மகாராஜா' இயக்குநரை பாராட்டிய விஜய்... என்ன சொன்னார் தெரியுமா?

சென்னை: விஜய் சேதுபதியின் 50வது படமான 'மகாராஜா' திரைப்படம் ஜூலை 12ம் தேதி தியேட்டரில் வெளியாகி சக்கைப்போடு போட்டு வசூலை அள்ளியது. பலரும் இந்த படத்தை பாராட்டிய நிலையில், படத்தின் இயக்குநர் நித்திலன் சாமிநாதனை விஜய் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இயக்குநர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விக்ரம், ஜவான் என பல திரைப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தினார். அதன் பிறகு இவர் ஹீரோவாக நடித்த லாபம், மெரி கிறிஸ்துமஸ், டிஎஸ்பி, யாதும் ஊரே போன்ற படங்கள் தோல்வித் திரைப்படமாக அமைந்தன. இதனால், அடுத்து ஒரு வெற்றியை கொடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த விஜய்சேதுபதிக்கு மகாராஜா திரைப்படம் ஒரு வெற்றிப்படமாக அமைந்தது.

Vijay Maharaja

ரூ100 வசூல்: விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா படத்தை 'குரங்கு பொம்மை' படத்தை இயக்கிய நித்திலன் சாமிநாதன் இயக்கி இருந்தார். இப்படத்தில் மம்தா மோகன்தாஸ், அனுராக் காஷ்யப் , அபிராமி, முனீஷ்காந்த், நட்டி நட்ராஜ் , பாரதிராஜா, சச்சினா நெமிதாஸ் மற்றும் பலர் நடித்திருந்தனர். பி. அஜனீஷ் லோக்நாத் இசையமைத்து இருந்தார். ராம் முரல் மற்றும் நித்திலன் சுவாமிநாதன் இணைந்து எழுதி இருந்தனர்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான 'மகாராஜா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் முதல் நாளில் இருந்தே நல்ல வரவேற்பை பெற்றதுடன் பாக்ஸ் ஆபீஸிலும் நல்ல படம் என்ற அங்கீகாரத்தை பெற்றது. 100 கோடிக்கும் மேல் வசூலை குவித்த இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.

Vijay Maharaja

நன்றி அண்ணா: இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் நித்திலன் சாமிநாதனை விஜய் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இயக்குநர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளர். அதில், டியர் விஜய் அண்ணா, இந்த சந்திப்புக்கு நன்றி. உங்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததை ஒரு பெருமையாக உணர்கிறேன். மகாராஜாவைப் பற்றி நீங்கள் கூறிய விவரங்கள் என்னைப் நெகிழவைத்தது. அது எனக்கு பெரிய பாராட்டு. உங்கள் அன்பு, ஆதரவு மற்றும் ஊக்கத்துக்கு மிக்க நன்றி லவ் யூ அண்ணா என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X